எதியோப்பியாவில் இருந்து ET 8699 விமானம் ஊடாக சில பயணிகளும் ஓமானில் இருந்து WY 371 விமானம் ஊடாக 50 பயணிகளும் நெதர்லாந்தில் இருந்து TST 7845 விமானம் ஊடாக 12 பயணிகளும் மாலைதீவில் இருந்து UL 102 விமானம் ஊடாக 31 பயணிகளும் பாக்கிஸ்தானில் இருந்து UL 184 விமானம் ஊடாக 2 பயணிகளும் துருக்கியில் இருந்து TK 730 விமானம் ஊடாக 8 பயணிகளும் ஓமானில் இருந்து UL 206 விமானம் ஊடாக 290 பயணிகளும் இஸ்ரேலில் இருந்து UL 1206 விமானம் ஊடாக 119 பயணிகளும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து EK 648 விமானம் மூலம் 75 பயணிகளும் இன்று வருகை தரவுள்ளனர்.
வருகை தந்த அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை (14) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 81 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,703 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (13) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 14,329 ஆகும்.
0 கருத்துரைகள்:
Post a comment