Header Ads



தன்னியக்க இயந்திரமொன்றை கண்டு பிடித்துள்ள, தரம் 11 மாணவன் MAM அம்ஹர்


- இக்பால் அலி -

மாணவர்கள் வகுப்பறைகளில் செனிட்டர் திரவியத்தால்  கைகளை கழுவும் போது  அதைத் தொடமால், கழுவுவதற்கு புதிய தொழில் நுட்ப ரீதியான  சிறிய ரக தன்னியக்க  இயந்திரமொன்றை  கண்டு பிடித்துள்ளார் குருநாகல் பாடசாலை மாணவன். 

கொவிட் கொற்றுக் காரணமாக பாடசாலை மாணவர்கள் வகுப்பறைகளில் செனிட்டர் திரவியத்தால்  கைகளை கழுவும் போது  அதைத் தொடமால் கழுவதற்கு  தொழில் நுட்ப ரீதியான தன்னியக்க இயந்திரமொன்றை  கண்டு பிடித்துள்ளார் குருநாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியில் 11 ஆண்டு தரத்தில் கல்வி பயிலும் மாணவன் எம். ஏ. எம். அம்ஹர்.

இன்றைய காலத்தின் தேவைக்கு ஏற்ப  கொவிட் 19 கொரோனா தொற்றுக் காரணமாக  முகக் கவசம் அணிந்து ஒரு மீட்டர் சமூகஇடைவெளியைக் கருத்திற் கொண்டு சுகாதார நடை முறைகளைப் பேணி வகுப்பறையில்  பாடங்களை கற்கும் மாணவர் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு மிக முக்கிய பங்களிப்பாக அமையும் என்ற நோக்கில்; இந்த கருவியை உருவாக்கியதாக அவர் தெரிவித்தார்.

இவர் சிறு வயதில் இருந்து பல கண்டு பிடிப்புக்களைச் செய்து வரும் இவர் அசாதாரண நிலைமைகளை எதிர் கொண்டு  பாதுகாப்பான  மற்றும்  கல்விச் சூழலை சுகாதார நடைமுறையுடன் வாழப் பழகுவதற்கான உகந்த சிறிய ரக தொழில் நுட்க தன்னியக்க இயந்திரம் கண்டு பிடித்த மாணவன் அம்ஹரை பாடசாலை சமூகம் பாராட்டுகின்றது. 

அவர் இதற்காக ட்ரான்ஸ்சிஸ்டர், ஐ. ஆர். ஸ்கேனர், மோட்டர்  முதலிய  மின்சார இயந்திர மூலப் பொருட்கள் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார். இதை மேலும் விரிவிடுத்தி தொழில் நுட்ப தேவைகளைப் பூர்த்தி செய்யவுள்ளதாக  அம்ஹர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் எ. எச். ஏ. முனாவ் கருத்து தெரிவிக்கையில்  ஆரம்பத்தில் இருந்து இப்படியான பல கண்டு பிடிப்புக்களை அவர் செய்துள்ளார். இவரது முயற்சிகளுக்கு எமது பாடசாலை சமூகம் தொடர்ந்து ஆதரவையும் பாராட்டுக்களையும் வழங்கும் என்று அவர் தெரிவித்தார். இம்மாணவின் முயற்சிகளுக்கு பாட ஆசிரியை எம். ஆர். சிபானியா  ராசிக் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு அளப்பரியவையாகும்




2 comments:

  1. Masha Allah...
    May Allah Bless him with more scientific inventions that will benefit human on earth and that will bring the love of Allah

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.