Header Ads



முஸ்லிம்களை நம்பி ஏமாந்தது போதும் - கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்


- பாறுக் ஷிஹான் -

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவடைய காரணம் இணக்க அரசியல் வெளிப்பாடு  என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்ட ஊடக அமையத்தில் இன்று(26)இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 22 இல் இருந்து குறைவடைந்து 16 ஆகி இன்று 10 வரை குறைவடைய காரணம் இணக்க அரசியலை மேற்கொண்டமையாகும்.கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் உங்களை (முஜடலீம்கள்) நம்பி ஏமாந்தது போதும்.எமது முதுகில் ஏறி சவாரி செய்வதை நிறுத்துங்கள்.இனியும் ஏமாற நாம் தயார் இல்லை.சிங்களம் முஸ்லீம் மக்களுடன் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம்.

எமது உரிமைகளை சலுகைகளாக கேட்பதை நிறுத்துங்கள்.29 கிராம சேவகர் பிரிவுகளை கொண்ட 40 ஆயிரம் தமிழ் மக்கள் பல வருடங்களாக அரசியலுக்கு அப்பால் அதிகாரிகளை நம்பி ஏமாறியுள்ளனர்.ஆகையினால் எம்முடன் இணைந்து வாழ விரும்பினால் விட்டுக்கொடுக்க வேண்டும்.தமிழர்களின் உரிமைகளை பறிப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க கூடாது.சட்டம் நீதி என்பது ஒன்றாக இருக்க வேண்டும்.ஆனால் தற்போது தமிழர்களின் உரிமைகளை பறிப்பதற்காகவே முஸ்லீம் அரசியல் வாதிகள் அரசுடன் இணைந்து செயற்படுகின்றனர் என்றார்.


4 comments:

  1. தமிழ் முஸ்லிம் உறவுக்கு தடையாக உள்ள விடயங்கள் பற்றி இருதரப்புப்பும் பேசி விட்டுக்கொடுப்புகளின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தமிழரைப்பொறுத்து கல்முனை மற்றும் மூதூர் நிர்வாக பிரிவுகளில் தமிழர் வாழும் பகுதிகளின் உரிமைகள் மட்டுமே பிரச்சினையாக கோரிக்கையாக முன் வைக்கப்படுகிறது. இதில் உருவாகவுள்ள கல்முனை வடக்கு பிரதேச சபை சிங்களவர்களின் பிச்சையாக இல்லாமல் தமிழ் முஸ்லிம் மக்களின் பேச்சு வார்த்தை எல்லை விட்டுக்கொடுப்புகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. வடகிழக்கை தவிர இலங்கை தனிமைப்படுகிறது. வடகிழக்கை தவிர இலங்கை சீன ஆதிக்கத்துள் வீழ்ந்துவிட்டது. வடகிழக்கில் தழிழரும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டால் நிச்சயம் உண்டு வாழ்வு.

    ReplyDelete
  2. இவர் 30 வருடமாக கோமாவிலிருந்து நேற்றுத் தான் விடுதலை கிடைத்ததோ?

    ReplyDelete
  3. Koralaipattu Central yean uruvaanathu maddakalapil muslimuku இடம் இருக்கக்கூடாதா yendaa yellarukum ஒரே சட்டம் ஒரே நீதி யென்று சொல்லி முஸ்லிம்கள் மட்டுமே vearoda veddisaaykkireenga

    ReplyDelete
  4. முஸ்லிம்களை நம்பி நீங்கள் எப்போது ஏமாந்தீர்கள்? புத்திகெட்டு மாற்றிச் சொல்ல வேண்டாம். நீங்கள்தான் சந்தற்பம் கிடைக்கும் போதெல்லாம் சந்தோசமாக குளிபறிப்பீர்கள். உங்களுக்கு இருபிரதேச சபைகள் உரிமைப்பிரச்சினை என்றால் வடகிழக்கு முழுவதும் தமிழர் தாயகம் என்பதற்கு வெட்கமில்லையா? சுமார் ஏழெட்டு இலட்சம் பூர்வீக முஸ்லிம்களும் உரிமையற்றவர்கள்???????????

    ReplyDelete

Powered by Blogger.