Header Ads



துமிந்த சில்வா விடுதலையாவதும், பசில் பாராளுமன்றம் வருவதும் தாமதமாகக்கூடாது


மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அரசியல் ரீதியான தீர்வு எனவும் நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அழுத்தங்களை கொடுத்து அந்த தண்டனையை வழங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சட்டத்தின் நீதியை மதிக்கும் அரசாங்கம் என்ற வகையில் துமிந்த சில்வாவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் கௌரவமான கோரிக்கையை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான ஆட்சியில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய கௌரவம் பசில் ராஜபக்சவுக்குரியது. இதனால், பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வந்து பொருளாதார விவகாரம் தொடர்பான அமைச்சை பொறுப்பேற்க வேண்டும். தொடர்ந்தும் இந்த இரண்டு விடயங்களை தாமதப்படுத்திக்கொண்டிருக்கக் கூடாது எனவும் அருந்திக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. ஆம் இந்த இரண்டு விடயங்களும் தாமதிக்கக்கூடாது, அவை உடனடியாக நடைபெறும் போது நாட்டின் பொருளாதாரம் தலைத்து ஓங்கி,சிறைகளில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் ஔியைக்கட்ட பன்னீர் துளிகள் போல் உடனடியாக தீர்க்கப்பட்டுவிடும்.இனி எஞ்சியிருப்பது இலங்கை ஒரு வல்லரசாக மாற்றமடைவது மட்டும்தான். அதுவும் மெதுவாகவும் துரிதமாகவும் நடைபெறும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
  2. Professional translation svs.. தரமான கருத்து சிரிக்க சிந்திக்க....

    ReplyDelete

Powered by Blogger.