Header Ads



ஈஸ்டர் தாக்குதல், பாராளுமன்றத்தில் உள்ள சிலரும் குற்றவாளிகள் என நிருபிக்கப்படும் - அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருங்கள் - அமைச்சர் சரத்


(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்ட 257 நபர்கள் தடுப்புக்காவலில் உள்ளனர், இவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்டமா அதிபரிகள் கைகளில் பொறுப்பாகும் எனத் தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,  திங்கட்கிழமை சட்டமா அதிபரை சந்தித்து வழக்குகளை துரிதப்படுத்த வலியுறுத்துவோம் என்றும் கூறினார்.

ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் தென்படவில்லை எனவும், குற்றவாளிகளை கண்டறிய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பிய வேளையில் அதற்கு பதில் தெரிவிக்கும் விதத்தில் அமைச்சர் சரத் வீராசேகர இதனைக் கூறினார்.

குற்றப்புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவினால் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 171 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் 86 பேர் தடுப்புக்காவலில் உள்ளனர். மொத்தமாக 257 பேர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளோம். இவர்கள் குறித்த வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.

எனவே திங்கட்கிழமை சட்டமா அதிபரை சந்தித்து சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தவுள்ளேன். அரசாங்கமாக நாம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். வழக்குகளை தொடுக்க வேண்டிய பொறுப்பு தற்போது சட்டமா அதிபரின் கையிலேயே உள்ளது.

மனித படுகொலை மற்றும் சதித்திட்டம் குறித்து முழுமையான விசாரணைகள் முடிந்து விட்டது. இதில் அடையாளம் காணப்பட்டுள்ள 257 பேரும் குற்றத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள். எனவே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது மட்டுமே உள்ளது. இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வேளையில் அவர்கள் யார் என்பது தெரியவரும். 

இந்த விசாரணைகள் குறித்து இன்னும் ஒரே ஒரு கோப்பு மட்டுமே கையளிக்கப்படவுள்ளது, இதில் அரசியல் ரீதியில், வேறு வழிகளில் உதவி செய்தவர்களின் தகவல்கள் உள்ளன. அதனையும் கொடுத்தவுடன் முழுமையாக அனைவரும் தண்டிக்கப்படுவர். இரகசிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் யார் எவர் என்ற காரணிகளை இப்போது கூற மாட்டோம். அதனை தெரிவித்தால் நிஷாந்தவை நாட்டை விட்டு தப்பவைத்ததைபோலவே இவர்களையும் அனுப்பி விடுவீர்கள். வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வேளையில் இந்த சபையில் உள்ள ஒரு சிலரும் குற்றவாளிகள் என நிருபிக்கப்படும். அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருங்கள் என்றார். 

3 comments:

  1. from start rajapaksa group of company initially

    ReplyDelete
  2. So, you will arrest Madumaadavaa & Gammanbila tooo for the coordinate violent to the innocent Muslims after this incident????

    ReplyDelete
  3. இவருடைய கருத்தைப் பார்க்கும் போது வௌியே ரணிலும் உள்ளே மைதிரியும் விரைவில் சிறைவாசம் மேற்கொள்ள இருககின்றனர் என்பது புலப்படுகின்றது.அது நடந்தால் ஓரளவேனும் இவர்களிடம் நியாயம் இருப்பதை உணரலாம். ஆனால் உண்மை என்னவேனில் இவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முய்னறவர்கள் என்றவயைில் உள்ள சொந்தக் கோபம் தான் இத்தகைய சட்டநடவடிக்ைகக்குக் காரணம் என்றால் அங்கு நாம் அந்த செயற்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.