Header Ads



"இலங்கையர்களின் ஜனாஸாக்களை தமது நாட்டில், அடக்கம்செய்யும் முடிவை கைவிட்டது மாலைதீவு"


இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தமது நாட்டில் அடக்கம் செய்யும் திட்டத்தை மாலைதீவு அரசாங்கம் கைவிடடுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

"கொழும்பு மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்காமல் இந்த நடவடிக்கையை கைவிட்டன" என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது..

இரு பிராந்திய அண்டை நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவைக் கருத்தில் கொண்டு மாலைதீவில் இலங்கையில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ் ஒப்புக் கொண்டதாக மாலைதீவு அரசாங்கம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டதாக மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தெரிவித்தார்.

எனினும் இதற்கு கடும் எதிர்ப்பு பல தரப்பிலிருந்தும் வெளிப்பட்டது.

"இந்த திட்டம் இரு நாடுகளுக்கும் பல அரசியல் மற்றும் சர்வதேசரீதியில் தாக்கங்களைக் உருவாக்கலாம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கலாம்" என்றும் அந்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.