Header Ads



அமெரிக்க உப ஜனாதிபதியின், கொள்கை ஆலோசகராக இலங்கைப் பெண்


யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கமலா ஹரிஸ் தனது தலைமைப் பணியாளர், உள்நாட்டு கொள்கை ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய அனைத்து துறைக்கும் பெண்களை நியமித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு முதல், ரோஹினி கொசோக்லு செனட் அலுவலகத்தில் கமலா ஹரிஸின் மூத்த ஆலோசகராகவும் பின்னர் தேர்தலின்போது மக்களுக்கான கமலா ஹரிஸ் என்ற பிரசாரப் பணிகளையும் முன்னெடுத்திருந்தார்.

ஹாரிஸின் ஜனாதிபதி பிரசாரத்தின் தலைமை ஊழியராக, ரோஹினி கொசோக்லு 40 மில்லியன் டொலர் பட்ஜெட்டில் 300 மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒரு குழுவிற்கான விவாதம் தயாரித்தல், கொள்கை, தகவல் தொடர்பு மற்றும் செயற்பாடுகளை நிர்வகித்து மேற்பார்வையிட்டார்.

ரோஹினி கொசோக்லுவின் பெற்றோர் வைத்தியர் விஜயதேவேந்திர ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரன் ஆகியோர் 1980 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.

சட்டமன்ற சாதனைகளுக்காக ஏராளமான விருதுகளை பெற்றுள்ள ரோஹினி கொசோக்லு, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டத்தையும் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சட்டமன்ற விவகாரங்களில் முதுகலை பட்டபடிப்பையும் நிறைவு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.