Header Ads



ஜனாதிபதி ஆணைக்குழு முன், ஹலீம் வழங்கிய சாட்சியம்

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு வன்முறை அமைப்பு என்பதை தாம் அறிந்திருக்கவில்லை என்று முஸ்லிம் விவகார முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று சாட்சியமளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அதேநேரம் 2017ம் ஆண்டு காத்தான்குடி அலியார் சந்தியில் இடம்பெற்ற மோதல் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முன்னர் சஹ்ரான் ஹாசிமையும் அறிந்திருக்கவில்லை என்று ஹலீம் குறிப்பிட்டார்.

தௌஹீத் ஜமாத்தின் உறுப்பினர்களுக்கு மக்களுடன் நெருங்குவது எப்படியென்று தெரிந்திருக்கவில்லை. அவர்கள் எப்போதும் பிரச்சனைகளை உருவாக்கி வந்தனர்.

நாட்டில் அமைக்கப்பட்டிருந்த தேவையற்ற பள்ளிவாசல்களை வரையறுப்பதற்காக சில நடைமுறைகள் அமுல்செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு பள்ளிவாசலை பதிவுசெய்து ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று முறை பின்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்

இந்தநிலையில் பள்ளிவாசல்களுக்கு வருகின்ற நிதிகள் தொடர்பில் தாம் சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.

ஊயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் பல பள்ளிவாசல்களில் இருந்து மீட்கப்பட்ட வாள்கள் தொடர்பில் சில காலங்களுக்கு முன்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் குறித்த ஆயுதங்கள், புதைக்குழிகளின் புற்களை வெட்டுவதற்கு வாள்களை பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்திருந்தமை தொடர்பில் நேற்று ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் ஹலீமிடம் கேள்வி எழுப்பினர்

இதற்கு பதிலளித்த அவர் அந்த வேளையில் தமக்கு வாள்கள் தொடர்பாகவும், புற்களை வெட்டும் கத்திகள் தொடர்பாகவும் தெரிந்திருக்கவில்லை என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.