Header Ads



அடக்கம் செய்ய இடமளிக்காவிட்டால், பிணத்தை வைத்துக்கொண்டு சாப்பிடுங்கள் என அறிவித்துள்ளோம் - அசாத் சாலி


கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை என்றால், உடல்களை பொறுப்பேற்க போவதில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -28- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முஸ்லிம் மக்கள் ஏற்கனவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். தாய், தந்தை இறந்தாலும் அடக்கம் செய்ய இடமளிக்கவில்லை என்றால், ஜனாஸாக்களை பொறுப்பேற்க போவதில்லை. அடக்கம் செய்ய இடமளிக்காவிட்டால், பிணத்தை வைத்துக் கொண்டு சாப்பிடுங்கள் என அறிவித்துள்ளோம்.

உலகில் 195 நாடுகள் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ள நிலைமை, இலங்கையில் மாத்திரம் எந்த அடிப்படையில் உடல்களை தகனம் செய்கின்றனர்? இது அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. நீங்கள் வாயைப் பொத்தி கொண்டு இருந்தால் சமூகம் நன்மை அடையும்

    ReplyDelete
  2. who are you to decide on behalf of sri lankan muslims? because of you people only muslims are facing these types of problems. you are not a leader of sri lankan muslims for your kind information.

    ReplyDelete
  3. அசாத் சாலி சேர்; நாங்கள் சுவரை நோக்கி பந்து ஒன்றினை வீசினால் அது சுவரைத் துழைத்துக் கொண்டு செல்வதில்லை. அடாது செய்பவன் படாத பாடு படுவான். இவற்றை எல்லாம் நம் முன்னோர்கள் "சும்மா" எழுதி வைக்கவில்லை. நீங்களும் படித்திருப்பீர்கள். வெள்ளவத்தையில் சவோய் தியேட்டரில் ஆங்கிலப் படம் திரையில் போடுவதற்கு முன்னர் "Side Reals" போட்டுக் காட்டுவார்கள். அதுதான் இப்போது Covid விடயத்திலும் நடக்கின்றது. இன்னமும் Main Movie திரையிடப்படவில்லை. கொஞ்ஞம் பொறுத்திருந்து பார்ப்போம். எமது முஸ்லிம் தாய்மார்களதும் உலமாக்களினதும் மக்களினதும் துஆக்கள் என்றும் வீண் போனது இல்லை. குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.