Header Ads



வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கு, எமது அரசாங்கம் முன்னுரிமையளித்து வருகின்றது - பிரதமர் மகிந்த


(நா.தனுஜா)

சர்வதேச நிதி நிலையத்தை அமைக்கும் அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக சீன துறைமுக பொறியியல் கம்பனி உள்ளிட்ட நிறுவனங்கள் இலங்கையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்துள்ளன. 

கொழும்பு துறைமுக நகரத்திற்குள் மேற்கொள்ளப்படும் முதலாவது முதலீடு இதுவாகும்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் ஷீ ஜென்ஹொங் ஆகியோர் முன்னிலையில் பிரவுன்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ், எல்.ஓ.எல்.சி குழுமத்தின் தொழில்நுட்ப முதலீட்டு வலையமைப்பு, சீன துறைமுக பொறியியல் கம்பனி (சைனா ஹார்பர் என்ஜினியரிங் கம்பனி லிமிடெட்) ஆகிய நிறுவனங்கள் நேற்று காலை மேற்படி முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

இதன்போது, கருத்து வெளியிட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, 

'வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கு எமது அரசாங்கம் முன்னுரிமையளித்து வருகின்றது. 

அந்தவகையில் இலங்கை மீண்டும் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துவிட்டது என்பதைக் காண்பிக்கும் ஒரு முக்கிய செயற்றிட்டமே இதுவாகும். 

எமது நாட்டின் அமைவிடம் மற்றும் எம்மிடமுள்ள வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய திட்டங்களில் முதலீட்டு செய்வதற்கு முன்வருமாறு நாம் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்" என்று தெரிவித்தார்.

அதேவேளை 'இலங்கை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை சீனா மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியிருப்பதுடன் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு உதவுவதற்கான கடப்பாட்டையும் நிறைவேற்றியிருக்கிறது. 

சர்வதேச நிதி நிலையம் இலங்கையின் நிதிநிலைமையை மேம்படுத்துவதுடன் மாத்திரமன்றி, பெருமளவான புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகுவதற்கும் அதனூடாக பொதுமக்கள் பயனடைவதற்கும் வாய்ப்பாக அமையும்" என்று சீனத்தூதுவர் ஷீ ஜென்ஹொங் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த செயற்திட்டம் மொத்தமாக 6.8 ஹெக்டேயர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்படவிருப்பதுடன், இரு கட்டங்களாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Good news about creating employment opportunities in our soil....
    Hope Chinese will not grab most this jobs and will give hand full to places to Sri Lankans.

    ReplyDelete
  2. அடுத்த அரசாங்கமும் அதன் முதன் மொழியும் சீனாதான். எனவே சீன மொழியைக் கற்க இன்றே புறப்படுங்கள். இனி முதல் மொழியும் கடைசி மொழியும் சீனாதான்.

    ReplyDelete

Powered by Blogger.