Header Ads



இது எனது மரண சாசனம், நன்றாகக் கேட்டுக் கொள், எல்லோருக்கும் எத்திவை...!


அன்புள்ள மனையாளுக்கு,

உள்ளம் பாரத்தால் கனத்து கனதியாகி நிற்கிறது.மரணித்தவனின் உரிமையைக் கூட மறுக்கும் ஒரு நாட்டில் நட்ட நடு வீதியில் நான் நிற்கிறேன்.

இது எனது மரண சாசனம். நன்றாகக் கேட்டுக் கொள்.எல்லோருக்கும் எத்தி வை.

மரணம் எனக்கு எப்போதும் வரலாம். நான் மரணித்தால் கொரோனா இல்லாவிட்டாலும் கூட நான் எரிக்கப்படும் சாத்தியமே இங்கு அதிகம்.எனவே எனது மரண வசியத்தை இப்போதே சொல்லி விடுகிறேன்.

ஒரு மனிதனின் ஆத்மா பிரியும் போது இறைவன் ஊதிய உயிர் இறைவனிடமே செல்கிறது. மண்ணால் செய்யப்பட்ட உடம்பு மண்ணுக்கே செல்கிறது. இதுதான் இறைவனின் நியதி. இந்த நியதி இங்கே நிர்மூலமாகிறது.

உயிர் பிரிந்த பச்சை உடம்பை பவித்திரமாக கழுவச் சொல்கிறது மார்க்கம் வலிக்கும் என்பதற்காக. எம்மை எரித்தால் என்னவாகும் எண்ணிப் பார்.

உலகில் எல்லோரையும் போல் நாங்கள் இறக்க விரும்புகிறோம். விரும்பியது போல் வாழத்தான் முடியவில்லை. விரும்பியது போல் இறக்கவும் முடியாதா எமக்கு?

மரணித்த என்னை இழுத்துக் கொண்டு போவார்கள்.எனக்கு கோரோனாவாம் என்று செய்தி வரும். கலங்கி விடாதே.

பணம் கேட்பார்கள் என்னை படுக்க வைக்க ஒரு பெட்டி வாங்க.கொடுத்துவிடாதே.கையெழுத்து இடு என்பார்கள் இட்டு விடாதே.பணம் கொடுத்தாலும் எரிப்பார்கள்.கொடுக்காவிட்டாலும் எரிப்பார்கள் என்றால், உன் கணவனை எரிக்க நீ ஏன் பணம் கொடுக்க வேண்டும். கையெழுத்து இட்டாலும் எரிப்பார்கள் இடாவிட்டாலும் எரிப்பார்கள் என்றால் என்னை எரிக்க நீ ஏன் இணங்க வேண்டும்?

ஒன்று என் கணவரை புதைக்கவிடு. இல்லையா நீயே எரித்துக் கொள்.எனக்கு சாம்பலும் வேண்டாம்.உன் சாம்பல் சட்டியும் வேண்டாம் என்று சொல்லிவிடு. சந்திக்கின்ற இடத்தில் அவரைச சந்திப்பேன் என்று சொல்லி விடு.  இதுதான் என் வசியத்து.

உண் கண்ணீரை இறுக்கித் துடை.என்னை எரிக்கட்டும் அவர்கள்.

ஓ நெருப்பே இப்றாஹூமுக்கு குளிராகிவிடு என்று கட்டளை இட்ட இறைவனுக்கு எனது நெருப்பை குளிர வைக்க முடியாதா என்ன?

ஆனால் அவர்கள் வருந்தட்டும்.முஸ்லிம்கள் மரணித்தவர்களின் உடம்பை பொறுப்பு எடுக்கிறார்கள் இல்லை என்ற செய்தி உலகம் முழுக்கப் பரவட்டும். அவர்களின் உரிமைக்காக அவர்கள் சொந்தங்கள் உடம்பைக் கூட ஏற்காதவர்கள் என்று உலகு எம்மைப் பற்றிப் பெருமை கொள்ளட்டும். அவர்கள் பிணவறைகள் நிரம்பி வழியட்டும்.  அவர்களே எரித்துக் கொள்ளட்டும்.வாழும் போது காட்ட முடியாத எதிர்ப்பை சாகும் போதாவது காட்டுவோம்.

நீயே வைத்துக் கொள். உனக்குப் பணமும் இல்லை. எனக்குப் பிணமும் இல்லை போ.

ஆனால் கவலைப்படாதே.எல்லோரும் அவனிடமே மீளுவோம். நீரில் மூழ்கி என்ன, நெருப்பில் வீழ்ந்து என்ன, மீன் விழுங்கி என்ன, எப்படியும் எல்லோரும் மீளுவோம் அவனிடமே.

அவனறிவான் அனைத்தையும்.  ஒரு முறையாவது நான் பொசுங்கு முன் என் முகத்தைப் பார்க்க முடியாத உன் வேதனையை அவன் அறிவான்.தந்தையைத் தொழுவிக்க முடியாத தனயனின் விம்மலையும் அவன் அறிவான். தாயைக் குளிப்பாட்ட முடியாத மகளின் விசும்பலையும் அவன் அறிவான்.மனைவியைத் தொழுவிக்க முடியாத கணவனின் கண்ணீரையும் அவன் அறிவான்.

ஆகவே அன்பே,

மீண்டும் எழுப்பப்படும் நாளில், நான் என் இறைவனின் சன்னிதியில் என்னை எரித்த சாம்பலில் இருந்து எழுந்து வருவேன்.நீ இதுவரை சேர்த்த கண்ணீரோடு எழுந்து வா. முறையிடுவோம் சாகக் கூட விடாத சத்திராதிகள் இவர்கள் என்று.

- Raazi Mohamed -


3 comments:

  1. ooooooh un varthayhal kanneerai kotta vaikiratu

    ReplyDelete
  2. ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். மரணம் என்பது வாழ்கையின் முடிவல்ல அது இன்னொரு வாழ்க்கையின் ஆரம்பம். அந்த நிகழ்வை மார்க்கம் சொன்ன முறையில் செய்ய விடாமல் தடுத்து ஜனாசாக்களை எரித்து சாம்பலாக்கும் நிலையை எண்ணி மக்கள் நொந்து விடாமல் இருப்பதற்கும், எல்லா வற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன் என்று பொறுப்பு சாட்டி தைரியமாக
    இருப்பதற்கும் சகோதரர் ராசி முஹமட் அவர்களின் இந்த மரண சாசனம் அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

    இது ஆன்மாக்களின் எச்சரிக்கை...

    ஓ முட்டால் அரசனே..
    நீ எரித்ததால் நாங்கள் முடிந்து விட்டோம் என்று எண்ணாதே. நீ எரித்தது எங்கள் ஸ்தூல உடம்பைத்தான், ஆனால் எங்கள் சூட்சும உடலை உன்னால் எரிக்க முடியாது. இதை உன்னால் ஒன்றும் புடுங்கவும் முடியாது. ஓ முட்டால் அரசனே.. நீயும் உன் உத்தரவை நிரைவேற்றிய முட்டால் அதிகாரிகளும், எங்கள் உடலை எரித்ததனால் மமதை கொண்டு துள்ளாதீர்கள். எங்களிடம் நீங்கள் தப்பவே முடியாது. எங்கள் முஸ்லிம் சமூகம் வேதனைப் பட்டதை விடவும் கடுமையான வேதனையை உன் சமூகமும் படுமளவுக்கு நாங்களும் உங்களை நிச்சயமாக துன்புறுத்தி சாகடிப்போம் விரைவில். அந்த நாள் மிக தொலைவில் இல்லை.

    இப்படிக்கு
    ஆன்மாக்கள்....
    கொரோனா ஜனாசா

    ReplyDelete
  3. As amuslim we couldn't do anything where is that Proud six cardboard MPs

    ReplyDelete

Powered by Blogger.