Header Ads



இலங்கையில் பலாத்கார ஜனாஸா எரிப்பு, தகவல் சேகரிக்கும் முஸ்லிம் நாட்டு தூதரகங்கள் - ஜப்பானிய ஊடகம் வெளியிட்ட தகவல்கள்



கொரோனாவினால் இறக்கும் உறவினர்களுக்காக நாட்டின் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் குடும்பங்கள் தங்கள் நம்பிக்கை அடிப்படையிலான அடக்கம் சடங்குகளை கைவிடுமாறு இலங்கையின் தீவிரவாத அரசாங்கம் கட்டாயப்படுத்துவதாக ஜப்பானிய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிக்கய் ஏசியா என்ற செய்தித்தாளே இந்த செய்தியை பதிவிட்டுள்ளது.

இதன் விளைவாக ஏற்கனவே சிக்கலான மனித உரிமை பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கை, மற்றும் ஒரு புதிய சர்வதேச பிரச்சனைக்கு முகங்கொடுப்பதாக குறித்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா மரண அதிகரிப்பு 200ஐ நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இலங்கையின் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் பெரும்பான்மை கடும் போக்குடையவர்களின் ஆதரவில் இயங்கிவருகிறது.

கொரோனாவினால் மரணமானோரின் உடலங்கள் -விரைவாக தகனம் செய்யப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருந்து வருகிறது. இது இழந்த உறவினர்களுக்காக ஏற்கனவே துக்கப்படுகிற சிறுபான்மையின மதத்தினர் மத்தியில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸினால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட 20 நாட்களேயான முஸ்லிம் குழந்தை, அவர் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டார். அத்துடன் கொரோனா வைரஸால் இதுவரை 80 முஸ்லிம்கள் இறந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அரசாங்கம் மீது கடும் கோபம் கொண்டுள்ளதாக ஜப்பானின் ‘நிக்கய் ஏசியா’குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த கொள்கை இறந்த ஒருவருக்காக துக்கப்பட வேண்டிய நேரத்தில் சமூகத்திற்குள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னணி முஸ்லிம் பெண்கள் உரிமை ஆர்வலர் செரீன் சரூர் குறிப்பிட்டுள்ளார்.

உடல் தகனம் என்பது இஸ்லாத்தில் பாவத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இலங்கை அரசாங்கத்தின் இந்த செயல்களால் முஸ்லிம்கள் குற்ற உணர்வுகளுக்கு உட்பட்டுள்ளார்கள் என்றும் செரீன் சரூர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதால் வைரஸ் மண்ணில் பரவி நாட்டின் நீர் அட்டவணையை மாசுபடுத்தும் என்ற காரணத்தை இலங்கையின் அரசாங்கம் கூறி வருகிறது.

அத்துடன் முஸ்லிம்கள் கல்லறைகளில் உள்ள இறந்த உடல்களை "உயிரியல் ஆயுதமாக” பயன்படுத்துவார்கள் என்ற கருத்தையும் இலங்கை அரசாங்கம் கொண்டிருப்பதாக ஜப்பானிய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் உலகின் முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த கொழும்பை தளமாகக் கொண்ட தூதரகங்கள் இலங்கை அரசாங்கத்தின் அடக்கம் தடையை உன்னிப்பாக கண்காணித்து தகவல்களை சேகரித்து வருவதாக ஜப்பானின் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. Where muslim countries news papers or any articals??

    ReplyDelete

Powered by Blogger.