Header Ads



கைதிகள் மூர்க்கத்தனமாக செயற்பட்டனர், அவர்கள் மருந்துகளையும் எடுத்துக் கொண்டனர்


ஞாயிற்றுக்கிழமை கலவரத்தில் ஈடுபட்ட மஹர சிறைக்கைதிகள் சிறைச்சாலை வளாகத்தில் காணப்பட்ட மருத்துவமனையின் மருந்தகமொன்றிலிருந்து மருந்துகளை எடுத்து என சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் 1600 கைதிகள் தங்களை பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரி கலகத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அவர் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு முயன்ற சிறைச்சாலை அதிகாரிகளுடன் கைதிகள் மோதலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளார்.

சிறைக்கைதிகளிற்கு உணவை வழங்கிக்கொண்டிருந்தவேளை அவர்கள் சிறைக்கூடங்களின் கதவுகளை உடைத்துக்கொண்டு சிறைச்சாலையின் முன்வாசலிற்கு வந்து தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கலகத்தில் ஈடுபட்ட 1800 பேரில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட 180 கைதிகளும் காணப்பட்டனர் என தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முயன்ற போதிலும் அது சாத்தியமாகவில்லை என தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியில் உள்ள மருத்துவமனையின் மருந்தகத்தில் இருந்து அவர்கள் எடுத்து பயன்படுத்திய மருந்துகள் கைதிகளின் மனோநிலையை பாதித்திருந்தன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் கைதிகள் மூர்க்கத்தனமாக செயற்பட்டனர் சிறைச்சாலையின் சொத்துள்ளகளை சேதப்படுத்தினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தரம் எச்சரித்த பின்னரே நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக துப்பாக்கி பிரயோக்தினை மேற்கொண்டோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.