Header Ads



வீடொன்றில் தற்போதைய நிலையில், யாராவது மௌத்தானால் என்ன செய்வது...? (அவசியம் படியுங்கள்)


வீடொன்றில் சம்பவிக்கின்ற மரணங்கள் தொடர்பாக, அதாவது கிராம சேவக உத்தியோகத்தர் அல்லது மரணத்தை பரீசிலனை செய்பவர் வீட்டுக்கு வர முன்னர் மரணித்தவரை குளிப்பாட்டி, கபனிட்டு, அதற்கான தொழுகையையும் நிறைவேற்றி விட முடியுமா என என்னிடம் பலரும் கேட்டிருந்தனர். அதற்கு விடையளிப்பதற்கு முன்னர் இன்னுமொரு முக்கியமான விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

2020.11.17 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிலே, PCR பரிசோதனை செய்யப்பட வேண்டிய மற்றும் PCR பரிசோதனை செய்யத் தேவையற்ற மரணங்கள் தொடர்பாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலே 04 வகையான மரணங்கள் தொடர்பாக எமக்கு கூறப்பட்டுள்ளது:

1. முடக்கப்பட்ட பிரதேசமொன்றில் அல்லது அதிக ஆபத்தான பிரதேசமொன்றில் (Locked Down Area and High Risk Area) ஏற்படுகின்ற மரணம். 

- இதற்கு PCR மற்றும் மரணப் பரிசோதனைகள் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

- PCR பரிசோதனையை பொறுத்தவரையில், சுகாதார உத்தியோகத்தர் (MOH) அல்லது பொது சுகாதார பரிசோதகர் (PHI) ஒருவர் வந்து PCR Sample மற்றும் மரணித்தவரின் உடலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வார்கள். அங்கே PCR பரிசோதனை முடிவு Negative என்றால் மரணித்தவரின் உடலை எமக்கு திருப்பி ஒப்படைப்பார்கள். 

2. தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீட்டில் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையத்தில் (Quarantine Center) 

யாராவது மரணித்தால் அவருக்கும் கட்டாயம் PCR பரிசோதனை செய்யப்படும். அப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் அல்லது மரணித்தவரின் உடலை கொண்டு சென்று PCR Sample எடுப்பார்கள். என்ன நடந்தாலும் PCR Sample எடுத்ததன் பின்னர் மரண உடல் எமக்குத் தரப்படமாட்மாது. அது வைத்தியசாலைக்கு கொடுக்கப்பட்டு அங்கே குளிரூட்டியில் இடப்படும். PCR பரிசோதனை முடிவு வந்ததன் பின்னர் அதன் அறிக்கை Negative ஆக இருப்பின் உடல் எமக்கு தரப்படும். 

3. முடக்கப்படாத, அதிக ஆபத்தான பிரதேசமல்லாத மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமல்லாத சாதாரண பிரதேசமொன்றில் மரணமொன்று இடம்பெற்றால் அதற்கு PCR பரிசோதனை செய்யப்படவேண்டிய அவசியமில்லை. ஆனால், மரண பரிசோதனை சில நேரம் செய்யப்படலாம். அது எவ்வாறாக இருப்பினும் மரண பரிசோதனை ஒன்று செய்யப்பட்டாலோ இல்லாவிட்டாலோ கொவிட்-19 தொடர்பாக வெளிப்படை அறிக்கை (Clearance Certificate) ஒன்று MOH அல்லது PHI இடமிருந்து மரணத்திற்கான இறுதிக் கிரியைகளை செய்து முடிப்பதற்கு முன்னர் பெறப்பட வேண்டும்.

வெளிப்படையான அறிக்கை ( Clearance Report) என்பது மரணித்த குறித்த நபர் அதி ஆபத்தான பிரதேசமொன்றில் (High Risk Zone) அல்லது முடக்கப்பட்ட பிரதேசமொன்றில் (Locked down area) அல்லது தனிமைப்படுத்தப்பட்ட (Quarantined) ஒருவர் அல்ல என PHI தரவேண்டிய அறிக்கையாகும். இவ்வாறான மரணங்களின் போது முதலாவதாக நாம் கிராம உத்தியோகத்தருக்கு மரணம் தொடர்பாக அறிவிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர் வந்து பார்க்கும்போது உங்களிடம் PHI அறிக்கை இருந்து அதனை சமர்ப்பித்தால் அவர் அனைத்தும் சரி என அந்த இடத்திலேயே செய்து தருவார். அல்லது அவரே PHI இற்கு அனைத்தும் சரி என அறிக்கை  வழங்குவார். 

இங்கு மிக முக்கியமான விடயம் என்னவெனில், MOH அல்லது PHI போன்றவர்கள் குறித்த மரணத்திற்கு PCR பரிசோதனை ஒன்று செய்யப்பட வேண்டும் என்று கூறுவார்களாயின் அப்போது PCR பரிசோதனை செய்ய வேண்டி ஏற்படும். 

4. வைத்தியசாலை ஒன்றில் எவராவது மரணித்தால் குறித்த மரணத்திற்கு PCR செய்வதா இல்லையா என்பதை குறித்த நபர் இருந்த வைத்தியசாலைப் பிரிவிற்கு (Ward) பொறுப்பான வைத்தியர்தான் அதனை முடிவுசெய்வார்.

அடுத்த விடயம்தான் (அது சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் இல்லை) ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது அவர் மரணித்தால் (On Admission Death) அவருக்கான மரண பரிசோதனை கட்டாயம் செய்யப்படும். அதற்காக PHI அல்லது MOH ஒருவரின் அறிக்கை பெறப்படல் வேண்டும். பின்னர் மரண பரிசோதனை செய்துவிட்டு உடலை தந்துவிடுவார்கள். அத்தோடு அவர் Locked down பிரதேசம் போன்றவற்றில் இருந்து கொண்டு செல்லப்பட்டால் கட்டாயம் PCR பரிசோதனை செய்யப்படும். 

PHI அல்லது MOH போன்றவர்கள் காரியாலய நேரத்தில் மற்றும் வேறு பிரதேசங்களிலிருந்து வந்து வேலை செய்பவர்களாக இருப்பதால், திடீரென இரவு நேரத்தில் மரணம் நிகழ்ந்தால் அவர்களின் அறிக்கை பெறுவதில் நடைமுறை ரீதியான பிரச்சினை ஒன்று காணப்படுகின்றது. அதற்கான தீர்வொன்றை சுகாதார அமைச்சு செய்து தரும் வரையில், ஊரிலுள்ள ஜனாஸா சங்கங்கள், அல்லது முக்கியஸ்தர்கள் MOH மற்றும் PHI போன்றோருடன் அந்நியோன்னிய தொடர்பொன்றைப் பேணி வருவது சிறந்தது. அத்தோடு அவர்களது தொடர்பிலக்கங்களை வைத்திருந்து அது தொடர்பாக அவர்களது உபதேசங்களைப் பெறுவது சிறந்தது.

அடுத்த பிரச்சினைதான், கிராம சேவக உத்தியோகத்தர் அல்லது மரணத்தை பரீசிலனை செய்பவர் வீட்டுக்கு வர முன்னர் மரணித்தவரை குழுப்பாட்டி, கபனிட்டு, அதற்கான தொழுகையையும் நிறைவேற்றி விட முடியுமா என்பது. 

கொவிட் உள்ளபோதும் சரி இல்லாதபோதும் சரி மரணமொன்று ஏற்பட்டால் அது அரசாங்கத்திற்கே சொந்தமாகின்றது. அந்த மரணத்திற்கான சட்டரீதியான சில விடயங்கள் காணப்படுகின்றன:

I- முதலாவதாக, மரணமொன்று நிகழ்ந்தால் கிராம உத்தியோகத்தருக்கு அது தொடர்பாக அறிவிக்க வேண்டும். 

குறித்த மரணித்த நபர் நோய் வாய்ப்பட்டிருந்ததை நன்கு அறிந்திருந்த கிராம உத்தியோகத்தராக இருப்பின், மரண இறுதி சடங்குகளை செய்யுமாறும் மரண சான்றுப்பத்திரம் பெறுவதற்கான கடிதங்களை தான் தருவதாகவும் கூறுவார். அவ்வாறு கூறினால் உங்களுக்கு குளிப்பாட்டுதல் மற்றும் கபனிடுதல் போன்ற இறுதி சடங்குகளை செய்யலாம். 

நான் வந்து மரணத்தைப் பார்த்துவிட்டுத்தான் கூற வேண்டும் என கிராம உத்தியோகத்தர் கூறினால் அவர் வரும் வரையில் மரண உடலைத் தொட முடியாது. அவர் பார்த்துவிட்டு இதற்கு மரண பரிசோதனை ஒன்று செய்ய வேண்டும் என்று கூறினால் மரண பரிசோதகர் வந்து பரிசோதனை செய்யும்வரை ஒன்றும் செய்யக்கூடாது. 

மரணமொன்று ஏற்பட்டால் அதற்கான மரண பரிசோதனை செய்வது தொடர்பான ஒழுங்கு தொடர்பாக குற்றவியல் நடைமுறை குறியீட்டில் 370 ஆவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மரண பரிசோதகர் ஒருவர் கட்டாயம் வந்து உடலைப் பார்க்க வேண்டும். அங்கே உடலில் ஏதும் அடிக்கப்பட்ட, கீறப்பட்ட காயங்கள் இருக்கின்றனவா, இரத்தம் ஓட்டப்பட்டுள்ளதா போன்ற விடயங்களை பார்த்ததன் பின்னர் அறிக்கை ஒன்றை தயாரித்து அதனை அவர் அருகிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்றிற்கு அனுப்ப வேண்டும். 

தவறுதலாகவாவது, மரண பரிசோகர் வர முன்னர் உடலை கழுவி, கபனிட்டு வைத்திருந்தால் அவருக்கு குறித்த அறிக்கையை செய்ய அது தடையாக இருக்கும். அப்போது, ஒன்று, நீங்கள் சட்டத்தை மீறியதாகக் கருதப்படும், அடுத்ததாக குறித்த உடலிலிருந்த சாட்சியங்களை அழித்திருக்கலாம் என மரண பரிசோதகருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். அவ்வாறாயின் அவர்கள் கட்டாயமாக உடலை பரிசோதிப்பதற்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வார்கள். அவ்வாறு நீங்கள் செய்வதால், சாதாரணமாக மரணித்தவராக இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பரிசோதனை நடாத்துமளவு பிரச்சினைக்குரியதாக மாற இடமுன்று. ஏனெனில் மரண பரிசோதகர் குறித்த நபர் நோயினால் மரணித்தவரா அல்லது கொலை செய்யப்பட்டவரா, தற்கொலையா என பல சந்தேகமான முறையில் பார்க்க இடமுண்டு. 

அதேபோன்றுதான் கிராம அலுவலகர் வருவதற்கு முன் கபன் செய்து வைத்திருந்தால் அங்கு அவருக்கும் குறித்த சந்தேகங்கள் ஏற்படும். 

கிராம அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பொன்றுக்கு சென்ற போது அவர்களில் பலர் மரணத்தை பார்வையிட அவர்கள் செல்லும்போது பலர் கபனிட்டு முடித்திருப்பதாக கூறினர். ஏனெனில் அனைத்தும் முடிந்ததன் பின்னர்தான் அவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றதாம். இன்னும் சிலர் செய்கின்ற தவறான விடயம்தான் மரண உடலை அடக்கம் செய்ததன் பின்னர்தான் கிராம அலுவலருக்கு கூறுகின்றனர். இவ்வாரான சந்தர்ப்பங்களில் கிராம அலுவலர்கள் தமது கடமையை செய்ய முடியாது போகும். அவ்வாறாயின் தேவையான கடிதங்களை பின்னர் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாது போகும். 

எனவே கிராம அலுவலர் அல்லது மரண பரிசோதகர் வர முன்னர் மரணித்தவரின் உடலிற்கு ஒன்றும் செய்யாதீர்கள்.

அடுத்ததாக பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கு சொல்லப்பட வேண்டிய முக்கியமான ஒரு செய்தி இருக்கின்றது. 

அதிகமான முஸ்லீம்கள் மரணித்தவர்கள் பற்றி குறித்த அரச அதிகாரிகளுக்கு அறிவிக்காது பள்ளிவாயல்களிலுள்ள அடக்கஸ்தளங்களில் அடக்கம் செய்கின்றனர். பள்ளி நிர்வாகிகள்கூட அவர்களது ஜமாஅத்தினராயின் அதற்கான அனுமதியை வழங்குகின்றனர். அவ்வாறின்றி அடக்கம் செய்வதற்கு முன்னர் நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டிய சில ஆவணங்கள் இருக்கின்றன;

I- அடக்கம் செய்வதற்காக கிராம அலுவலகர் அல்லது இறப்புப் பதிவாளர் அல்லது நீதிமன்றம் வழங்கிய அனுமதிக் கடிதங்கள். அவை இருக்கின்றனவா என பரிசோதித்து அவற்றின் நிழல் பிரதி (Photo Copy) ஒன்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும். 

குறித்த ஒழுங்கில் மரணித்தவர் அடக்கம் செய்யப்படாதவிடத்து மரண அத்தாட்சி சான்றிதழை பெற முடியாது போகும். அதனால் சொத்துப் பிரச்சினைகள் மற்றும் மரணித்தவரின் வங்கிக் கணக்கிலுள்ள பணம் பெற முடியாது போதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 

அடக்கம் செய்ய முன்னர் பள்ளிவாயல் நிர்வாகிகள் குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறும்போது குறைந்தபட்சம் அவர்கள் அந்த நேரமாவது குறித்த அதிகாரிகளை அணுக வாய்ப்பிருக்கிறது. அத்தோடு அடக்கம் செய்ததன் பின்னர் உடலை மீண்டும் தோண்டி எடுக்கப்படாதிருக்க அது உதவும். 

மொஹமட் பர்ஸான் 

செயலாளர் - இலங்கை கொர்னல் சங்கம்

(Translation of Sinhala Audio Clip)

நன்றி Dr Mareena Reffai

2 comments:

Powered by Blogger.