December 24, 2020

முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதா, அடக்குவதா என்பது மதம் சார்ந்த விடயமல்ல - தொழிற்நுட்ப ரீதியாக தீர்க்க வேண்டியதே


கொரோனா மரணங்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை இனம் அல்லது மத பிரச்சினையாக மாற்றிக்கொள்ளாது, சுகாதார பிரச்சினையாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை மிகவும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும் என்பதுடன், அதனை அரசியல் பிரச்சினையாக மாற்றிக்கொள்ளக்கூடாது எனவும் கொழும்பில் இன்று -24- ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது தேரர் கூறியுள்ளார்.

இந்த மரணங்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்ற பிரச்சினையில், அரசாங்கமும், எதிர்க்கட்சியும் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை கவரும் வகையில் செயற்படுவது மிகவும் மோசமான நிலைமை.

சிறுபான்மை மக்களை மகிழ்விக்க ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது. எதிர்க்கட்சி சிறுபான்மை மக்களின் வாக்குகளை தமது பக்கம் கவர, அவர்களின் பக்கம் இருக்க வேண்டும் என நினைக்கின்றது.

இந்த இடத்தில் நாம் சிக்கலாக்கி கொண்ட விடயம் உள்ளது. சிறுபான்மை மக்களின் வாக்குகளை எதிர்பார்த்து தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் மோசமான நிலைமை.

உண்மையில் இது அப்படி செய்ய வேண்டிய விடயமல்ல. இந்த சந்தர்ப்பத்தில் மனித இனத்தின் நலனுக்கான என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

இதனால், அரசாங்கமும், எதிர்க்கட்சியும் அடிப்படைவாத அணிகளின் பல்வேறு சக்திகள் ஊடாக செயற்படும் குழுக்களுக்காக இந்த சுகாதார பிரச்சினையை தேசிய பிரச்சினையாக அல்லது மத பிரச்சினையாக மாறும் நிலைமை உருவாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூட மக்களை தம்மிடம் தக்க வைப்பதற்காக அடிப்படைவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பேசி வருகின்றனர்.

அத்துடன் சுகாதார பிரச்சினையை சுகாதார பிரச்சினையாக தீர்த்துக்கொள்ள முடியாது என்றால், நாட்டு மக்களின் ஞானம் குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும்.

பிரச்சினையை தீர்க்க சுகாதார துறையினருக்கு இடமளிக்கப்பட வேண்டும். விஞ்ஞான ரீதியான ஆய்வுகளிலேயே இந்த பிரச்சினைக்கு தீர்வு இருக்கின்றது. இது தொழிற்நுட்ப ரீதியாக தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்றை அன்றி மத சார்ந்த விடயமல்ல.

விகாரைகளில் உள்ள பிக்குகள், கோயில்களில், தேவாலயங்களில் இருக்கும் மத குருமார் இது குறித்து பேச வேண்டிய அவசியமில்லை.

அரசியல்வாதிகள் இதில் தலையிடும் அவசியமில்லை. சுகாதார பிரச்சினை தீர்க்க சுகாதார அதிகாரிகளுக்கு இடமளியுங்கள் எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

5 கருத்துரைகள்:

இவருக்கு உலக சுகாதார துறையும்,விஞ்ஞான துறையும் என்ன சொல்லியுள்ளது என்று தெரியாமல் தற்போதுதான் போதையிலிருந்து விழிப்புற்றவன் போல் தன்னை அறிமுகம் செய்கின்றார்!

ஆம்; உண்மையிலேயே கண்ணியமிக்க மெதகொட அபயதிஸ்ஸ தேரர் பொருத்தமான கருத்துக்களை கூறியிருப்பதனையிட்டு நாம் மகிழ்வடையாமல் இருக்க முடியாது. ஊடகங்களில் கொவிட் மரணங்களை அகற்றுவதற்கு உலகில் இரண்டே இரண்டு நாடுகளில்த்தான் தகனம் செய்தல் நடைபெறுகின்றது. உலகில் உள்ள 195 நாடுகளில் இலங்கையும் சீனாவும்தான் உடலகளை எதிர்க்கின்றன. உலக நாடுகள் பலவும் மாத்திரமன்றி WHO கூட எரிப்பினைத் தவிர்க்குமாறு கூறியும் அரசு விடாப்பிடியாக இருப்பதனை நோக்கக்கூடியதாக இருக்கின்றது. இது ஏன் என்று புரியவில்லை. சுகாதார நிபுணர்கள் குழுவில் யார் யார் இருக்கினறார்கள் என்பதனையாவது அரசு தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் அந்நிபுணர்கள் உண்மையிலேயே அதற்கான தகமையுடையவரகளா என்று மக்களும் புத்திஜீவிகளும் புரிந்து கொள்வர். முஸ்லிம்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதாக இருந்தால் அரசு WHO வின் உதவியை நாடலாம். அவரகளும் மனமுவர்ந்து இதனைத் தீர்த்து வைப்பார்கள். அதனை விடுத்து நாங்கள் எரிப்போம்தான் என்ற முடிவில் அரசு தொடர்ந்து இருந்தால் முடிவு பிழை என்றால் அதனை கடவுள் பார்த்துக் கொள்வான். இதைத் தவிர முஸ்லிம்களால் ஒன்றும் செய்ய கூற முடியாது.

சீனாகூட இறந்த உடல்களை புல்டோசர்களால் குழிதோண்டிப் புதைக்கும் காட்சிகள் வெளியானமை எனக்கு நினைவிருக்கிறது?

1. කොවිඩ්19 පිළිබඳ අප හා ලොව අනෙකුත් රටවල් අනුගමනය කරන්නේ ලෝක සෞඛ්යී සංවිධානයේ මග පෙන්වීම් ය. ඔවුන්ගේ උපදෙස් හා මඟ පෙන්වීම් විද්යා්ත්මක පදනමකින් යුක්ත බව පිළිගත් සත්යෙයකි. ඔවුන් කොවිඩ්19 මෘත දේහ පිළිබඳ ව භූමිදානය හා ආදාහනය අනුමත කොට ඇත. ඔවුන්ගේ අනෙකුත් උපදෙස් පිළිපදින අප භූමිදානය ප්රිතික්ෂේප කොට ආදාහනය පමණක් අනුමත කොට කටයුතු කිරීම විද්යා ත්මක පිළිවෙතක් බව පෙනෙන්නට නොමැත. මේ පිළිබඳ ව අපගේ සෞඛ්යු නියෝජිතයින් ඉදිරිපත් කරන ප්රවධාන සාධකය නම් භුමිදානයෙන් ජල මුලාශ්රව දුෂණය වීමෙන් රෝග පාතිරීමකට ඉඩ සැලසිය හැකි බවයි. මෙය විද්යාිත්මකව තහවුරු කරන ලද්දක් නොවන අතර හුදෙක් උපකල්පනයක් පමණි.

2. ජීවත්ව සිටින දහස් ගණනක කොවිඩ්19 රෝගීන්ගේ වැසිකිලි, කැසිකිලි හා අනෙකුත් අපද්ර ව්ය්ය සෘජුවම පොළොවට එකතුවෙයි. මෘතදේහ සියයෙන් ගිණිය යුක්ත වන අතර ජීවත් වන රෝගීන් දසදහසින් ගිණිය යුතු තත්ත්වයක් උදාවී ඇත. ජීවත්වන රෝගීන්ගේ අපද්රිව්යනය දෛනිකව මහ පොළොවට එකතු වෙයි. මෙයින් ජල මුලාශ්රැ දුෂණය වූ බවට අපට සාධක නොමැත.

3. සම්පුර්ණයෙන් මුද්රාත තබන ලද දේහ ආවරණයක (body bag) බහා එය සම්පුර්ණයෙන් මුද්රාො තබන ලද මිනී පෙට්ටියක තබා භුමිදානය කළ විට ඉතා දිග කලක් යනතුරු දේහය ආවරණය වන මෙම ක්ර්ම දෙක දිරාපත් වන්නට ගතවනු ඇත. මෙම දීර්ග කාලය තුල වෛරසය ජීවත්වනු ඇතැයි යන්නට කිසිදු විද්යාරත්මක සාධක නොමැත. දැනට ඇත්තේ ජීවී ශරීරයක පමණක් මෙම වෛරසය ජීවත්විය හැකි බව ඇති විද්යාාත්මක තහවුරුව පමණි.

4. සියළු සැකයන් දුරු කිරීම පිණිස කොන්ක්රීුට් වලින් නිමවූ මිනීවළවල් සාදා දෙන්නට ද YMMA (Sri Lanka) සංවිධානය කැමැත්ත දක්වා ඇත. මෙවන් ආරක්ෂිලත පිළිවෙත් අනුගමනය කිරීමට විකල්ප යෝජනා වී ඇති තත්ත්වයක් තුල කිසිදු විද්යාීත්මක පදනමකින් තොරව හා ඥාතීන්ගේ විරෝධය මත මෘත දේහ ආදාහනය කිරීම සැබැවින්ම මිනිසත් කමට ඔබින්නක් නොවන බව අප විසින් තීරණය කළ යුතු නොවේද?

5. ලොව ප්රීසිද්ධ වෛරස වේදීන්ගේ කරුණු දැක්වීම අනුව භුමි දානය තුළින් දැනට සඳහන් කිසිදු හානියක් නොවන බව ඉතා පැහැදිලි ලෙස දකින්නට ඇත. එබෝලා වෛරසය පිළිබඳ පර්යේෂණ සිදු කළ ලොව ප්රඉසිද්ධ වෛරස වේදියෙකු වූ හොන්කොන් විශ්ව විද්යාිලයේ මහාචාර්ය මලික් පීරිස් මහතාගේ කරුණු ඉදිරිපත් කිරීම මේ පිළිබඳ ව ඉතා වැදගත් වනු ඇත. ලොව රටවල් 190ක කොවිඩ්19 ආසාධිත මෘත දේහ භූමිදානය කරති.

6. ඉහත සාධක හා අනෙකුත් විද්යා ත්මක කරුණු මත පදනම් වී කොවිඩ්19 මෘතදේහ සමාජයට හානිදායක නොවන පිළිවෙතක් අනුගමනය කරමින් භූමිදානය කිරීමට කිතුනු හා මුස්ලිම් සමාජයට අනුමැතිය දීම මනුෂ්යනත්වයට කරන්නාවූ ගෞරවයකි. මෙවන් පිළිවෙතක් අනුගමනය කිරීම අපගේ මාතෘභූමියේ උත්තරීතර නීතිය වූ රාජ්යටය ව්යරවස්ථාවෙන් ද ප්ර්තිපාදන සලස්වා ඇත.
ශ්රීම ලංකා ප්රතජාතාන්ත්රි්ක සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්ර ම ව්යිවස්ථාවේ III වැනි පරිච්ඡේදයේ මූලික අයිතිවාසිකම් පිළිබඳ කොටසේ 10 හා 14 (1) වැනි වගන්තීන් හි පහත සඳහන් අයුරු සටහන් කොට ඇත.
3–10"සෑම තැනැත්තෙකුටම තමන් අභිමත ආගමක් ඇදහීමේ හෝ වැළඳ ගැනීමේ නිදහස ද, ලබ්ධියක් හෝ විශ්වාසයක් දැරීමේ හෝ පිළිගැනීමේ නිදහස ද ඇතුළුව සිතීමේ නිදහසට, හෘදය සාක්ෂියේ නිදහසට සහ ආගමික නිදහසට හිමිකම් ඇත්තේ ය”.
3 - 14. (1) “සෑම පුරවැසියකුටම - ( ඉ) එකලාව හෝ අන් අය හා සමග, ප්රයසිද්ධියේ හෝ පෞද්ගලිකව තම ආගම, ලබ්ධිය හෝ විශ්වාසය ඇදහීමෙන්, පිළිපැදීමෙන්, ප්ර ගුණ කිරීමෙන් සහ ඉගැන්වීමෙන් ප්රමකාශ කිරීමේ නිදහසට; ( ඊ) එකලාව හෝ අන් අය හා සමග හෝ ස්වකීය සංස්කෘතිය භුක්ති විඳීමේ හා වැඩි දියුණු කිරීමේ නිදහසට සහ ස්වකීය භාෂාව භාවිත කිරීමේ නිදහසට; හිමිකම ඇත්තේ ය”.

Sri Lanka is the only country doing PCR test for dead bodies. Why any hidden agenda ?

Post a comment