Header Ads



ராவய பத்திரிகைக்கு முஸ்லிம்கள் எப்படி, நன்றிக்கடனை செலுத்தப் போகிறார்கள்..?


இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக  அவ்வப்போது  பெரும்பாண்மை அரசியல்வாதிகள் , மதவாதிகள், இனவாதிகளால் வேண்டுமென்று  அவிழ்த்துவிடப்படும்   பிரச்சினைகளுக்கு  ராவய எனும் சிங்கள வாராந்த பத்திரிகை கடந்த 15 வருடகாலமாக  முஸ்லிம்களது உண்மைகளை ஆதாரபூர்வாமானதாகவும் நியாயமானதுமான , கட்டுரைகளை சிங்கள மொழி மூலம் வெளிக்கொனரும் ஒரே ஒரு பத்திரிகையாகும்.

”ராவய ” பத்திரிகையை கடந்த 25 வருடகாலமாக சிரேஸ்ட ஊடகவியாலாளா் விக்டா ஜய்வன் அவா்களினால் ஆரம்பிக்கப்பட்ட து. சிங்கள மக்கள் பெரிதும் விரும்பி வாசிக்கும்  இப் பத்திரிகையில்  இவ் வார 20.12.2020 திகதிய  வெளியீடான ராவய பத்திரிகையில் ” 4  முழுப் பக்கங்களை முஸ்லிம்களுக்கான கட்டுரைகளை வரைந்துள்ளது.  அக் கட்டுரைகளில் முஸ்லிம்களது நியாயங்களை பல்வேறு தலைப்புக்களில்  வெளியிட்டுள்ளது. 

முஸ்லிம்கள் இந்த நாட்டில் பிறந்தவா்கள் அவா்களது உடல்கள் இந்த  நாட்டிலேயே  அடக்கம் செய்யப்படல் வேண்டும், முஸ்லிம்கள் கள்ளத் தோனிகள் அல்ல, என்ற கட்டுரையை ஊடகவியலாளா்  ரசிக்க குணவா்த்தன எழுதியுள்ளாா்.  

2வது கட்டுரையை ஜயந்த உயன்கொட அவா்களினால் ”  முஸ்லிம் மக்களது துயரமும்  அவா்களது வேதனைகளும் 

” 3வது கட்டுரை ”கொவிட்19 இறக்கும் முஸ்லிம்கள் அடக்கம் செய்யப்படல்வேண்டும் அவா்களது உடல்கள் எரிக்கக் கூடாது.  என, பலரது கருத்துக்கள் அடங்கிய கட்டுரையில் அலிசப்றி, அலி ஸாகிா் மௌலானா, ரீ.என்.ஏ பாராளுமன்ற உறுப்பிணா் சனாக்கியன், இலங்கை மாலைதீவு ஜக்கிய நாடுகள் பிரநிதி, பேராசிரியா் மலிக் பீரிஸ், பேராசிரியா் பலிகடவன ஆகியோா்களது  டுவிட்டா் முகநுால் கருத்துக்களை அடங்கிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

13 comments:

  1. Where is NOOR NIZAM and Ulama Katchi Mubarak moulavi (red cap). Why don't you both go and speak to your master. உங்கள் இரண்டு பேருக்கும் ரோஷம் ஏதும் இருந்தால் இதற்கு இந்த யாழ் முஸ்லிம் இல் மறுமொழி தர வேண்டும் என்று தயவாக கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு ஏமாந்த மனிதர்கள்.

    ReplyDelete
  2. Shouldn't the Muslim community send a letter to Raavaya, like an Online Petition, signed by as many as possible, expressing the appreciation of the community at large?

    ReplyDelete
  3. சிங்கள மொழி தெரிந்தவர்கள ராவய பத்திரிகையை வாங்கி வாசித்தல் வேண்டும்.நன்றிக்கடனாக அமையும் .

    ReplyDelete
  4. Alhamdulillah.I know I was an ardent reader when I lived in Sinhala areas during the JVP terror.They always maintained a balanced report.They have genuine, educated journalist in their panel.Majority educated people among the Sinhalese always raised their voice when in comes to injustice. Some of them even escaped abroad some faced numerous unfair treatment and life threat too.This happened when the power was misused by the rulers in the past.

    ReplyDelete
  5. நன்றியுடையவர்களாய் இருப்போம்
    இப்போதைக்கு முடியுமானவரை
    ராவய பத்திரிகையை வங்குவோம்

    ReplyDelete
  6. உலக தமிழர்கள் சார்பாக ராவய தோழ தோழியருக்கு நன்றி கூறுகின்றேன். ஈழ, மலையக தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்கள ஜனநாயக சக்திகளும் ஒன்றுபடுவோம்.

    ReplyDelete
  7. அப்பத்திரிகைக்கு எமது விளம்பரங்களை அதிகளவில் வழங்குவதற்கு முனைப்புக் காட்டலாம்.

    ReplyDelete
  8. அப்பத்திரிகைக்கு எமது விளம்பரங்களை அதிகளவில் வழங்குவதற்கு முனைப்புக் காட்டலாம்.

    ReplyDelete
  9. "ராவய" பத்திரிகையையும் அதன் ஆசிரியர் விக்டர் ஐவன் அவரகளைப் பற்றியும் இங்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய இலங்கைப் பிரபலங்களைப் பற்றியும் இலங்கையின் புத்திஜீவிகள் மட்டுமல்ல சாதாரண கல்வியாளர்களும் மிக நன்கு அறிந்து வைத்துள்ளனர். எவரும அரசியல்வாதிகளாக வந்துவிட முடியும். ஆனால் புத்திஜீவிகளாக விடயங்களைப் பகுத்துணர்வக்கூடியவரகளாக வரமுடியாது. நாம் அறிந்தவரை மேற்கண்டவரகள் ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்து தம் முயற்சியின்மூலமாக அறிவுலகில் உயர்ந்தவரகளாகக் காணப்படுகின்றனர். இத்தகையோரில் இன்னும் பலர் அரசியல்வாதிகளாகவும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் உள்ளனர். அவரகளுல் மிகவும் பலர் தாம் வகிக்கும் பதவிக்காகத் தங்கள் வாயை திறக்க முடியாதவரகளாகக் காணப்படுகின்றனர். ஆயினும் சுமந்திரன் போன்ற இன்னும் பலர் உச்சத்திற்கே சென்று தமது ஜனாசா எரிப்பிற்கான தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். எல்லாக் காலமும் ஒன்றுபோல் இருப்பது இல்லை. எரியும் நெருப்பும் அணையும் நாள் நீண்ட தூரத்தில் இருப்பது இல்லை. ஆனால் ஆடையில் படரும் கரும் புள்ளி வரலாற்றில் ஒருபோதும் அழிவது இல்லை.

    ReplyDelete
  10. We must salute them always

    ReplyDelete
  11. Muslim Should give their advertisements Ravaya for along time Mr Ivan writes and speaks impartially he is very good examplory Gentle man for all srilanken

    ReplyDelete
  12. கடந்த ஆண்டு ரவாயா செய்தித்தாள் நிதி நெருக்கடியின் உச்சத்தில் இருந்தது எனக்குத் தெரியும். சில நல்ல மனம் படைத்தவர்கள் அதற்கு உதவினார்கள். ஆகவே, அந்தச் செய்தித்தாளை மேலும் மேலும் வாங்குமாறு நியாயமான சிந்தனையுள்ள மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சிங்கள மொழியில் சரளமாக இல்லாவிட்டால், குறைந்தபட்சம் நீங்கள் அவர்களுக்கு நன்கொடைகளை வழங்கலாம். இதன்மூலம் நியாயமான மற்றும் சீரான செய்திகள் பெரும்பான்மை மக்களை சென்றடைவதை உறுதிசெய்ய முடியும். சிங்கள மொழியில் எங்களுக்கு சொந்தமான செய்தித்தாளைத் தொடங்குவதை விட இதுவே சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.