Header Ads



வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு, புதிய தனிமைபடுத்தல் 6 வழிகாட்டல்கள் (முழு விபரம் உள்ளே)


வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் தனிமைப்படுத்தல் செயற்பாடு தொடர்பில், சுகாதார அமைச்சால் 6 காரணங்களை உள்ளடக்கிய புதிய வழிகாட்டல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கட்டாயமாக 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருப்பது அவசியமாகும்.

மேலும் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டலை உரிய முறையில் பின்பற்றும் நபர்கள், மீண்டும் தமது வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதென சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தனவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 6 காரணங்களை உள்ளடக்கிய சுகாதார வழிகாட்டல்கள் வருமாறு,

1. இலங்கைக்குள் நுழைந்ததன் பின்னர், முதல் நாள் பிசிஆர் செய்வது கட்டாயமானது.

2. அரச வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், 14 நாள்கள் தனிமைப்படுத்தல் கால பகுதிக்குள் தனியறை அல்லது இரட்டைப் பகிர்வு ( நபர்களின் எண்ணிக்கை குறைந்தது 2 அல்லது ஒரு குடும்ப  உறுப்பினராக இருக்க வேண்டும்)

3. இந்த அறைகளுக்கு தனியான சுகாதார வசதிகள் காணப்பட வேண்டும் என்பதுடன் தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர்கள் ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

4. தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் எவ்விதத்திலும் பிற தனிமைப்படுத்தல் நபர்களுடன் கலக்க கூடாது

5. தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் 12- 14 நாள்களுக்கிடையில் பிசிஆர் முன்னெடுப்பது அவசியம் என்பதுடன், இதன் பெறுபேறு எதிர்மறையாக இருக்க வேண்டும்.

6. 14 நாள்கள் நிறைவின் போது, சம்பந்தப்பட்ட மத்திய நிலையத்தின் பொறுப்பான அதிகாரி அல்லது பிரதேச சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளான நபர் குறித்து திருப்தியடைந்திருத்தல் வேண்டும்.

எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள 6 அடிப்படை காரணங்களையும் முழுமைபடுத்தும் நபர்கள் மீண்டும் தமது வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலில்'இருப்பது அவசியம் இல்லை என சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.