Header Ads



இலங்கையில் 4 மில்லியன் பேருக்கு, முதலில் கொரோனா தடுப்பு மருந்து தேவை - சுதர்ஷினி


கொரோனோ தடுப்பூசி முதன்முதலில், சுமார் 4 மில்லியன் மக்களுக்கு வழங்க வேண்டிய தேவையுள்ளது. எனினும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் ஆரம்ப வைத்திய சேவை, தொற்றுநோய் மற்றும் கொவிட் - 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தற்போது தயாரிக்கப்படுகின்ற தடுப்பூசிகளில், ஒன்றை உலக சுகாதார ஸ்தாபனத்தினூடாக பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு தேவையான அளவில் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினுடன் கலந்துரையாடி, நாட்டிற்கு பொருத்தமான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் ஆரம்ப வைத்திய சேவை, தொற்று நோய் மற்றும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்

1 comment:

Powered by Blogger.