Header Ads



கத்தாரின் 49 ஆவது தேசிய தினம் - உலகத் தலைவர்கள் வாழ்த்து (படங்கள் இணைப்பு)


கத்தார் நாட்டில் இன்று (18-12-2020) வெள்ளிக்கிழமை 49வது தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு COVID-19 காரணமாக விதிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், தோஹா கார்னிச்சில் இன்று நடைபெற்ற 2020 தேசிய தின அணிவகுப்பில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், இதேபோல் கத்தார் அமீரின் தந்தை HH ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானி அவர்களும் பங்கேற்றார்.

இந்த அணிவகுப்பில், ஷூரா கவுன்சில் சபாநாயகர் அஹ்மத் பின் அப்துல்லா பின் ஜைத் அல் மஹ்மூத் மற்றும் ஷூரா கவுன்சிலின் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், அமெரிக்க விமானப்படைகளின் மத்திய கட்டளை தளபதி Lieutenant General Gregory Guillot  உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

கத்தார் தேசிய தினத்தையொட்டி, உலக நாடுகளில் உள்ள பல தலைவர்களும் கத்தார் அமீருக்கு வாழ்த்துக்ளை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தேசிய தினத்தையிட்டு ஒருதொகை கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.




No comments

Powered by Blogger.