இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.
புறக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவரும், ராகமை பிரதேசததை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும், கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் வவுனியா பிரதேசததை சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a comment