பியகம பிரதேசத்தில் இன்று -13- நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் கொவிட் தொற்று பரவுகை அதிகரித்துள்ளது எனவும் பாடசாலைகள், பார்கள் என்பன மூடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்பொழுது பானி வகைகள் மாத்திரைகள் என்பன எடுத்துக் கொள்கின்றார்கள் எனவும் இதனால் என்ன நேருமோ எனத் தெரியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1956ம் ஆண்டில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது இவ்வாறு வதகஹா பெத்தி என்னும் உள்நாட்டு மருந்து ஒன்றை எடுத்துக் கொண்டதனால் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டது எனவும் பெரும் தொகையான மக்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் அனுமதிக்கப்பட்ட மருந்துகளையே நாம் எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் இந்த உள்நாட்டு மருந்துகளை பயன்படுத்துவது குறித்தான பிரச்சாரம் பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2 கருத்துரைகள்:
சுகாதார அமைச்சரின் முன்மாதிரியைப் பின்பற்றி பிரித் தணணீர் குடத்தை நிரப்பி ஆற்றில் வீசிவிட்டு, நாட்டுப் பாணியை கரண்டியால் வாயில் ஊற்றிக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்.
சுகாதார அமைச்சரின் முன்மாதிரியைப் பின்பற்றி பிரித் தணணீர் குடத்தை நிரப்பி ஆற்றில் வீசிவிட்டு, நாட்டுப் பாணியை கரண்டியால் வாயில் ஊற்றிக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்.
Post a comment