Header Ads



பாராளுமன்றில் எதிர்ப்பை வெளியிட்ட பெண் Mp க்கள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சுகாதார பாதுகாப்பு துவாய்க்கும் வரிகளை அதிகரித்து பெண்களை நெருக்கடிக்குள் தள்ள அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக சபையில் ஆளும் -எதிர்க்கட்சி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போர்க்கொடி தூக்கினர்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற  குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இது குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் டயானா கமகே கூறுகையில், இந்த நாட்டில் 52 வீதமானவர்கள் பெண்கள். இவர்களின் சுகாதார மற்றும் மனிதாபிமான பிரச்சினையாக ஒரு விடயம் மாறியுள்ளது. அதாவது பெண்கள் பயன்படுத்தும் சுகாதார பாதுகாப்பு துவாய்க்கு 15 வீத வற்வரி விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இது பெண்களின் அத்தியாவசிய தேவை, அதுமட்டும் அல்ல இந்த நெருக்கடியான நிலையில் நாட்டில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகளில் 50 வீதமானவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில்லை. 

எனவே இது சுகாதார ரீதியில் பாரிய பிரச்சினை. எனவே இதனை அத்தியாவசிய தேவையாக கருதி  இதற்கான வரியை நீக்க வேண்டும் என ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டின் சகல பெண்களின் சார்பிலும் தாழ்மையுடன் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன் என்றார்.

விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன கூறுகையில், 1848 ஆம் ஆண்டு டொரிங்டன் ஆளுநர், நாய்களுக்கு வரி விதித்ததை போல இந்த அரசாங்கம் மாதவிடாய்க்கு வரி அறவிடும் நிலைமை உருவாகியுள்ளது.பாடசாலைக்கு செல்லும் பெண் பிள்ளைகளில் பலர் தமது மாதவிடாய் காலங்களில் மருத்துவ துவாய்களை பெற்றுக்கொள்ள முடியாது வீடுகளில் உள்ளனர். 

இந்த விடயத்தில் இலவசமாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்த மருத்துவ துவாய்களுக்கு எமது நல்லாட்சி அரசாங்கத்தில் 40 வீத வரி விலக்களிக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் மாதவிடாய் வரியையும் சுமத்தி பிசாசுகள் போன்ற ஆட்சியை நடத்த நினைக்கின்றனர் என்றார்.

ஆளும் கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க கூறுகையில், இந்த நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும், அதனை இந்த அரசாங்கம் செய்யும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அரசங்கம் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தியாக வேண்டும் என்றார். 

3 comments:

  1. இது போனறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெண்களின் தேவைகளையும் அவர்களைப் பாதிக்கும் விடயங்களையும் பாராளுமன்றத்தில் வௌிப்படுத்தி அவற்றுக்கான தீர்வைப் பெற இது போன்று அனைத்து பெண் உறுப்பினர்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. This is what Sajith has delivered plans during his president compaighn but public were took his plan as jocks... this country people must realize the reality for our motherland. But when????

    ReplyDelete
  3. ஆகையால்... பாராளுமன்றத்தில் 20 ஆம் சட்டத்துக்கு வாக்களித்து நாங்கள் முஸ்லீம் போர்வையில் உள்ள முனாபிக்குகள் என்பதை நிரூபித்த அந்த அமைச்சர்களும் , முஸ்லீம் வாக்கு எனும் அமானிதத்தை பெற்று பாராளுமன்றத்தில் சுக போகம் அனுபவிக்கும் முஸ்லீம் அமைச்சர்கள் என்று சொல்லும் துரோகிகளும் இந்த 3 பெண்களின் புடவையை வாங்கி அணியவும்... முஸ்லிம் அமைச்சர்கள் என்பதால் அவர்கள் உள்ளாடைகள் இலவசம் ..

    ReplyDelete

Powered by Blogger.