Header Ads



ஹேசா Mp யின் குற்றச்சாட்டுக்கு, அலி சப்ரியின் அதிரடி பதில


கொரோனாவினால் உயிரிழந்த தனது உறவினரின் உடல் புதைக்கப்பட்டது என்பதை நிரூபித்தால், நான் பதவி விலக தயார் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் அலி சப்ரியின் உறவினர் ஒருவர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து அவரது உடல் புதைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே குற்றம்சாட்டியுள்ளார்.

உயிரிழ்ந்தவரின் உடலை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தியவேளை அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானது என தெரிவித்துள்ள ஹேசா விதானகே எனினும் அவரது உடல் புதைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

தனது உறவினர்களிற்காக நீதியமைச்சர் சட்டத்தினை வளைக்கின்றார் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை நிராகரித்துள்ள நீதியமைச்சர் தனது தனிப்பட்ட நலனிற்காக சட்டத்தினை வளைப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் தான் தனது அமைச்சு பதவியையும் நாடாளுமன்ற பதவியையும் இராஜினாமா செய்ய தயார் என நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நான் இறந்தால் கூட ஏனையவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டால் என்னுடைய உடலையும் தகனம் செய்யவேண்டும் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


4 comments:

  1. Perumpalum erikkapatte janasakelin PCR report
    %Athiha patse santheham%

    Korona enru uruthiyahaze eththeneyo janasakel eikkepattullezu..
    Neethi enge senrethu..

    ReplyDelete
  2. ஆட்டுக்கு வாய் சரி இல்ல ... அதுவா அட்ரஸ் கேட்டு அடுப்புல போய் உக்கார பாக்குது.

    இதை நிரூபிக்கா விட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லாமல், ஒன்றுமே செய்யாட்டியும் பரவாயில்ல ஏதோ இது சரி கிடைச்சுதே சரித்திரத்துல நம்மட இனம் இல்லாம ஒரு பாராளுமன்றம் வராமல் இருக்கிறதுக்கு என்று நினைக்காம, அப்பன் ஓட்டுல வந்தது போல ராஜினாமா செய்வேன் என்று வீர வசனம் வேற.

    ReplyDelete
  3. தான் இறந்தால் எனது உடலும் தகனம் செய்யப்பட வேண்டும் என்று ஏன் அங்கீகரிக்கிறீர்கள். கொரோனாவால் இறந்தால் தானே இந்த நியதி.

    எனது இறந்த உடலை எரிக்காமல் ஆக்க சட்டத்தை அவசரமாக முஸ்லிம்களுக்கு சாதமாகவும் மற்ற நாடுகளை போலவும் ஆக்க முயட்சி எடுப்பேன் என்று கூறியிருக்கலாம்.

    ReplyDelete
  4. கௌரவ. அலி சப்ரி அவரகளுக்கு; உங்களுடைய எதிராளியிடமிருந்து நல்ல பெயர் வாங்குவது என்பது மிக மிக கஷ்டம். அப்படி ஓரிரு சந்தர்ப்பங்களில் அது நடந்தாலும் தவிர்க்க முடியாத நிலையிலேயே நடந்திருக்கும். உங்களை வைத்து பகடைகளை நகர்த்த இடம் அளிக்க கௌரவ. அலி சப்ரி அவரகளுக்கு; உங்களுடைய எதிராளியிடமிருந்து நல்ல பெயர் வாங்குவது என்பது மிக மிக கஷ்டம். அப்படி ஓரிரு சந்தர்ப்பங்களில் அது நடந்தாலும் தவிர்க்க முடியாத நிலையிலேயே நடந்திருக்கும். உங்களை வைத்து பகடைகளை நகர்த்த இடம் அளிக்க எவரையும் விட வேண்டாம். அத்தோடு உங்கள் உள்வீட்டு மாப்பிள்ளைகளுக்கும் போருத்தமானவிதத்தில் பாடங்களைக் கற்பிக்கவும் மறந்துவிட வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.