Header Ads



கொரோனா இப்போது வீடுகளுக்கு வந்துள்ளது - மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் - GMOA


இந்நாட்டில் கொரோனா தொற்று பரவல் போன்று ஏற்படும் மரணங்கள் தொடர்பினாலும் நாடு ஆபத்தான நிலையில் பயணிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 11 மரணங்கள் பதிவானமை ஆபத்தான நிலமையென வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

நாட்டில் முதலாவது கொரோனா தொற்றின் போது 9 மாதங்களில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவானதாகவும் இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 11 மரணங்கள் பதிவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுள் சிலர் உயிரிழந்த பின்னரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்பு வீதம் தொடர்பில் எதிர்காலத்தில் அதிகளவில் நேரிடம் வேண்டி ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் இப்போது வீடுகளுக்கு வந்துள்ளதாகவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.