Header Ads



சொந்த வாழ்வில் சோகங்களை சந்தித்த, மனிதர் நடத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் போராட்டம்


அமெரிக்காவில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்டு டிரம்பை வீழ்த்தி, அதிபர் பதவியை பிடிக்கிறார் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்.

மூன்றாவது முயற்சியில் வெற்றி

இதற்கு முன்பாக இரண்டு முறை அதிபர் பதவிக்கு முயன்றிருக்கிறார் பைடன்.

1988ம் ஆண்டு பிரிட்டன் தொழிலாளர் கட்சித் தலைவர் நெயில் கின்னாக்கின் பேச்சை காப்பியடித்து பேசியதாக அவரே ஒப்புக்கொண்டு அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகினார்.

2008ல் ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளர் ஆவதற்கு முயர்சி செய்தார். பிறகு அவரே அந்தப் போட்டியில் இருந்து விலகி ஒபாமாவின் துணை அதிபர் வேட்பாளராக நியமிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டார்.

8 ஆண்டு காலம் ஒபாமாவோடு துணை அதிபராக இருந்தது ஒபாமா ஆட்சியின் பெருமைகளில், அதன் மரபில் உரிமை கோர பைடனுக்கு உதவியாக இருந்தது.

1974ல் இளம் செனட்டராக பைடன்.

தமது சொந்த மாநிலமான டெலாவேரில் இருந்து 1972ல் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன், மொத்தம் ஆறு முறை செனட்டராக தேர்வு செய்யப்பட்டார்.

நீண்ட தண்டனைக் காலத்தையும், பலரை ஒன்றாக சிறையில் அடைப்பதையும் ஊக்குவித்ததாக இடதுசாரிகளால் குற்றம்சாட்டப்படும் 1994ம் ஆண்டின் ஆன்டி கிரைம் மசோதாவை தீவிரமாக ஆதரித்தவர் பைடன்.

2015ல் தமது மகன் பியூவை( இடது) இழந்தார் ஜோ பைடன்

ஜோ பைடனின் வாழ்வு தனி மனித சோகங்கள் நிரம்பியது என்பது பல அமெரிக்கர்களுக்குத் தெரியும்.

1972ல் நடந்த ஒரு கார் விபத்தில் அவர் தமது முதல் மனைவி நெய்லியா மற்றும் பெண் குழந்தை நவோமி ஆகியோரை இழந்தார். இந்த விபத்தில் உயிர் பிழைத்த தமது இளம் மகன்கள் பியூ மற்றும் ஹன்டர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை அறையில் இருந்து அவர் தமது முதல் செனட்டர் பதவிக்காலத்துக்கான பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.

2015ல் அவரது மகன் பியூ மூளை புற்று நோயால் தமது 46வது வயதில் இறந்தார். 2016ல் அதிபர் பதவிக்கான போட்டியில் ஈடுபடாததற்கு இது ஒரு காரணம் என்று பைடன் கூறியுள்ளார். BBC

No comments

Powered by Blogger.