Header Ads



மந்திரிக்கப்பட்ட பிரித் தண்ணீரை ஆற்றில் கலக்கும் முட்டாள்தன முயற்சிகளை கைவிட வேண்டும் - சமன் ரத்னப்பிரிய


மந்திரிக்கப்பட்ட பிரித் தண்ணீரை ஆற்றில் கலக்கும் முட்டாள் தனமான முயற்சிகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் கைவிட்டு, சுகாதாரத்துறையுடன் இணங்கி கொரோனா தொற்று ஒழிப்பு முயற்சிகளை செய்யவேண்டும் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் -02- கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தாதியர் சங்கத்தின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

சுகாதாரத் துறையில் இன்று பல்வேறு குறைப்பாடுகள் காணப்படுகின்றன. தாதியர்கள் உட்பட மருத்துவத்துறையில் உள்ளவர்கள் பலருக்கும் தேவைகளை அரசாங்கம் பூர்த்திசெய்து கொடுக்கவில்லை. மன அழுத்தத்தில் உள்ளனர்.

இத்தாலியில் கொரோனா தொற்றின் முதல் தாக்கத்தில் ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள்? அங்கு தாதியர்கள் தொடர்ந்தும் பல மணிநேரம் சேவைசெய்து இறுதியில் அவர்களும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களாகி சிலர் தற்கொலையும் செய்துகொண்டனர்.

இந்த நிலைமை எமது நாட்டிற்கும் வரக்கூடாது. கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பௌத்த பிக்குகளால் மந்திரிக்கப்பட்ட தண்ணீர் அடங்கிய குடங்களை ஆற்றில் இடுவது போன்ற காணொளிகள் பரவியுள்ளன.

அவ்வாறு செய்வதன் ஊடாக கொரோனா தொற்றினை ஒழித்துவிடமுடியுமா? அல்லது அப்படி செய்வதால் தொற்றானது ஓரிடத்திற்கு கொண்டுவரப்படுமா?

முதலில் இதுபோன்ற முட்டாள்தனமாக செயற்பாடுகளை அரசாங்கம் கைவிட்டு சுகாதாரத்துறைக்கு முதலிடத்தை வழங்கவேண்டும். ஆனால் இன்று இராணுவத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று 37 பி.சி.ஆர் பரிசோதனைகள் பயன்படுத்தப்படாமல் காணப்படுகின்றன. கொவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை வரும் என்று எச்சரித்திருந்தோம். ஆனால் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றார்.

2 comments:

  1. அங்க என்னடா என்றால் இவங்க அண்ணண் மார்கள் மாட்டு சாணிப்பீயை திண்டுட்டு மாட்டு மூத்திரத்தை குடிகினம்.இக்கே என்னடான்னா தம்பிமார்கள் இப்படி செய்யுராங்க எப்படி ஒத்துமையாக இருக்காங்க.

    ReplyDelete
  2. Well Said. Stupid People ....

    ReplyDelete

Powered by Blogger.