Header Ads



பாராளுமன்ற உறுப்பினராக பஷில் செல்வாக்கு செலுத்துவார் - டிலான் பெரேரா


(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பஷில் ராஜபக்‌ஷ  பாராளுமன்ற உறுப்பினராக அரசியலில் செல்வாக்கு செலுத்துவதை  நாட்டு மக்கள்  ஏற்பார்கள். என பாராளுமன்ற  உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின்  காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை -03- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் முறையான நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. பொருளாதாரத்துக்கும், மக்களின்  பொது சுகாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்‌ஷவின் சிறந்த திட்டமிடலுக்கு அமையவே 2020 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

   அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம்  இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தலாம் என ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்  பஷில் ராஜபக்‌ஷ  பாராளுமன்ற உறுப்பினராக  அரசியலில்  செல்வாக்கு செலுத்துவதை நாட்டு  மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.

1 comment:

  1. MR.BAILA DILAN PERERA NOW IT SELF YOU ARE TRYING TO HOLD CANDLE TO BASIL RAJAH.BUT YOU WILL NEVER GET A CABINET MINISTER POSITION.-GOOD LUCK

    ReplyDelete

Powered by Blogger.