Header Ads



ஜனாசாக்களை எரிக்காதீர்கள், நல்லடக்கம் செய்ய அனுமதி கொடுங்கள் - பாராளுமன்றத்தில் உருக்கம்


- தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா -

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பாக தற்போது அனல் பறிக்கும் கருத்துக்கள் சகலாரும் முன் வைக்கப்பட்டுவருகின்றது.இன்றைய பாராளுமன்றத்திலும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,பாராளுமன்ற உறுப்பினர்கள் லக்ஷ்மன் கிரயெல்ல,றிசாத் பதியுதீன் ஆகியோர் தமது அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன்,நியாயமான கோறிக்கைகளையும் முனவைத்திருந்தனர்.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துறை தொடர்பில் ஏன் இந்த அரசு கவனம் செலுத்துவதில்லை என்ற கேள்வியே இவர்களினால் முன் வைக்கப்பட்டது.இந்த முன் வைப்புக்கள் பற்றி பல தரப்புக்களும் தமது ஜனநாயக கருத்துக்களை முகப் புத்தகங்களில் பதிவேற்றிவருவதையும் காண முடிகின்றது.

கொவிட் 19 இனால் மரணமாகும்  உடல்களை  முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பது மதக் கடமையாகும்.சர்வதேச நாடுகள் இதனை பின்பற்றிவருகின்ற நிலையில் இலங்கை மற்றும் இதற்கு விதி விலக்காக இருப்பதற்கு அரசாங்கம் சுகாதார தரப்பின் தீர்மானம் என கைவிரித்துவிட்டது.இது பல தரப்பினராலும் குறிப்பிட்டு முறைப்பாடாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

சுகாதார வழிகாட்டல் என்பது சகல நாடுகளுக்கும் பொருத்தமானதாகவே தயார்படுத்தப்பட்ட போதிலும் இலங்கை செயற்பாட்டின் பின்னணி சில கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதுடன்,ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களின் எதிர்ப்புக்கும் ஆளாகியுள்ளதை காணமுடிகின்றது.கடந்த 8 மாதங்களுக்குள் கொவிட்டின் தாக்கம் தெரிந்தும் இதனை கட்டுப்படுத்த போதுமான சட்ட வரைவுகளும்.அலோசனைகளும் உரிய காலத்தில் தயாரிக்கப்படாமையானது கொவிட்டின்அதிகரிப்புக்கு காரணம் என்பதை எதிர்கட்சிகளும்,சுகாதார தரப்பின் ஒரு பகுதியினரும தொடராக குற்றம் சாட்டி வரும் நிலையில் அதனை அரசு மறுத்துவருவதையும் எம்மால் காணமுடிகின்றது.தனிமைப்படுத்தல் சட்டம் மக்களை தனிமைப்படுத்தாமல் இருக்கின்றது.இதற்கு முக்கிய காரணமாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களின் நாளாந்த செயற்பாடுகள் முடக்கப்பட்டதன் காரணமாகும்.இதற்கான மாற்று வழியாக அரசாங்கம் நிவாரணங்களை வழங்கிவருவதும் இன்றைய காலத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் கொவிட் மரணம் முஸ்லிம்களை பொருத்த வரையில் பெரும் சங்கடத்தை தோற்றுவித்துள்ளதுடன்.உடலங்கள் எரிக்கப்படும் மரணித்த ஜனாஸாவுக்கு செய்யும் அகௌரவம் என்பதை இன்றைய பாராளுமன்ற அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசு மௌனம் கலையுமா?அல்லது இன்னும் நாட்கள் செல்லுமா ?  இதனை கலைவதற்கு இஸ்லாமியர்களின் பார்வையில் தற்போதும் இருக்கும் அவச்சத்தின் வெளிப்பாடாகும்.

1 comment:

  1. முஸ்லிம்களுக்கு ஏதோ நல்லது நடக்கிறது போல தோன்றுகிறது. பின் நோக்கங்களின்றி முஸ்லிகளுக்கு நல்லது நடக்க இறைவனை பிரார்த்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.