November 09, 2020

கொரோனா ஜனாஸாக்களை, மன்னாருக்கு எடுத்துச்செல்ல தயார் - ஹுஸைன் போல்ட்


- A.A. Mohamed Anzir -


பல ஆயிரம் ஜனாஸாக்களின் நல்லடக்கத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன். கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்கள் தகனம் செய்வதில்லை என தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானமானது, மனதுக்கு நிறைவை தருகிறது சமூக சேவையாளர் ஹூஸைன் போல் குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கொரோனாவினால் முஸ்லிம்கள் மரணித்தால், அவர்களின் உடல்களை மன்னார் மாவட்டத்திற்கு எடுத்துச்சென்று, அங்கு நல்லடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். 


அவ்வாறயின் அதற்கு உதவுவதற்கு நானும் தயாராக இருக்கிறேன். நாங்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று, இப்பணியை நிறைவேற்றவும் ஆர்வமாக இருக்கிறோம் என்றார்.

3 கருத்துரைகள்:

அல்லாஹ்வுக்காக செய்யப்படும் சிறிய அமலுக்கும் மலையளவு கூலி உண்டு.அல்லாஹ் உங்களின் வாழ்க்கையில் பறக்கத் செய்வானாக ஆமீன் .

சொர்க்கத்தில் மிக உயர்ந்த இடத்தை அல்லாஹ் உங்களுக்கு வெகுமதி அளிப்பான்

Post a comment