Header Ads



முஸ்லிம் ஒருவர் எழுதியுள்ள வஸீயத் (முழு விபரம் உள்ளே)


இது இவரின் வஸீயத் (மரணசாசனம்) 

தயவு செய்து முழுமையாக வாசியுங்கள்,  அல்லாஹ்விற்காக. 

எனது வாரிசுகளே,  இரத்த உறவுகளே,  சொந்தங்களே,  நன்பர்களே, இந்த பிரதேச சகோதர, சகோதரிகளே,  இந்த நாட்டின் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே,  உலகில் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துகு. 

உலகில் எங்கும் இல்லாதவாரு , நமது நாடான சிறி லங்காவில் மாத்திரம் கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாவை எரித்தேயாகவேண்டும் என்று பிடிவாதமாக எரிக்கப்படுகின்றன. 

எவ்வளவோ கெஞ்சியும்,  மண்றாடியும் எந்தவித கருணையையும் காணமுடியவில்லை. 

நாளை   (30.11.2020) நீதி என்ன சொல்லும் என்று தெரியாது. 

ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய முடியும் என்று தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று வல்ல அல்லாஹுவை பிரார்த்திப்போம். 

இருப்பினும் முன்நடவடிக்கையாக, உயிருடன் இருக்கும் போது,  எனது இந்த வஸீயத்தை (மரணசாசனம்) உங்களுக்கு எத்திவைக்கின்றேன். 


" நான் வீட்டிலோ அல்லது  வைத்தியசாலையிலோ மரணித்தால் எனது ஜனாஸாவிற்கு PCR Test செய்ய அரசு முனையும் போது மௌனமாக  இருங்கள். எனது ஜனாஸாவை எடுத்துச் சென்று எரிக்க முனையும் போதும் மௌனமாக இருங்கள்.  அது நாட்டின் சட்டம் அதை தடுக்கவும் முடியாது. 

ஆனால் எனது ஜனாஸாவை எரிப்பதற்கு,  நீங்கள் கையொப்பம் இட்டு அனுமதி கொடுத்து விடாதீர்கள். 

அதேபோன்று எனது ஜனாஸாவை சவப்பெட்டியில் வைப்பதற்கு, சவப்பெட்டி வாங்கிக் கொடுக்கவோ அல்லது அதற்குரிய பணத்தை வழங்கவோ கூடாது. 

அத்துடன் வேறு எவரும் நன்கொடையாக வழங்கும் சவப்பெட்டியில் எனது ஜனாஸாவை வைப்பதற்கு அனுமதி வழங்கிவிடாதீர்கள். 

இது உங்கள் உரிமை. இது நம்மைப் படைத்த அல்லாஹ் மீது சத்தியம். 

இந்த வஸீயத்தை  (மரணசாசனம்) எனது சுய புத்தியுடனும்,   சுய நினைவுடனும் பதிவிடுகின்றேன்.

அல்லாஹு அக்பர். 


M.Y . ABDUL ZAKKOOR, JP (Wh.I), 

Ret. Sri Lanka Technological Service (Civil), Special Class (Supra), 

151/B, Mathrasa Road, Kalmunai  - 10.

28.11.2020.


2 comments:

  1. I wish this brother send a copy of it in ( Sinhale or English language) to the President, Priminister and Health authority who made burning policy of Covid dead bodies also.

    He could send a copy even to WHO to realize the suffering of Muslims in Sri Lanka.

    ReplyDelete
  2. Jazakallah for your kind message for our socity, I wish your health and fast recovery by the help of Allah.

    ReplyDelete

Powered by Blogger.