Header Ads



உதைப்பாந்தாட்ட வீரர்களை நாட்டில் உருவாக்க திட்டம், யாழ் அபிவிருத்தி பற்றியும் நாமல் ஆர்வம்

தம்மைப்போன்று வட பகுதிகளில் இருந்தும், இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட தலைமை காரியாலயத்தினை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30 வருட காலமாக நடந்த யுத்தத்தின் தாக்கத்தின் காரணமாக வடபகுதி அபிவிருத்தி அடையாத நிலை காணப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் வடபகுதியில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

விளையாட்டின் மூலம் திறமையானவர்களை அடையாளங்காண்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்துள்ளோம்.

இளைஞர்கள், விவசாயிகளாக மாற வேண்டும், இளைஞர்கள் வர்த்தகர்களாக உருவாக வேண்டும்.

பாடசாலை கற்றலில் மாத்திரம் சிறந்து விளங்காது நாடு, சமூகம் போன்றவற்றில் முகம் கொடுப்பதற்கு தேவையான அறிவு மற்றும் ஆற்றலை விருத்தி செய்ய வேண்டும்.

எதிர்காலத்தில் விளையாட்டுத்துறையில் நாம் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னேடுக்கவுள்ளோம்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி பல்வேறுப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்காலத்தில் உதைப்பந்தாட்டத்தை ஊக்குவிக்கவுள்ளோம்.

20 லட்சம் உதைப்பாந்தாட்ட வீரர்களை நாட்டில் உருவாக்கவுள்ளோம்.

கிரிக்கட் விளையாட்டை எடுத்துக்கொண்டால் விரைவில் லங்கா பிரிமியர் லீக் தொடர் இடம்பெறவுள்ளது.

அதில் யாழ்ப்பாண அணி பங்கேற்கவுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக பங்கேற்கவுள்ள அந்த அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மாற்றத்தையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அதற்கு தேவையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்கவுள்ளோம்.

எனவே இளைஞர்கள் எதிர்காலம் பற்றி சிந்தித்து வெற்றிப்பெறுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Namal sir, வடக்கு மாகாண இளைஞ்சர்கள் மட்டுமல்ல, கிழக்கு, மலையக தமிழ் இளைஞர்களும் தான் சேர்க்கபடல் வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.