Header Ads



அமானா வங்கி, விடுத்துள்ள அறிவிப்பு


சௌபாக்கியா கொவிட்-19 மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அமானா வங்கி 1.8 பில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது

இலங்கையின் முன்னணி வட்டிசாரா வங்கியியல் சேவைகளை வழங்கும் அமானா வங்கி, நாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் மறுமலர்ச்சிக்காக ரூ. 1,904 மில்லியனை பகிர்ந்தளிப்பதற்கான அனுமதியை இலங்கை மத்திய வங்கியிடமிருந்து பெற்றுள்ளது. இதன் பிரகாரம் 180 வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட விண்ணப்பங்களுக்கு இந்தத் தொகையை பகிர்ந்தளிக்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது. 

அதற்கமைய, இந்தத் திட்டத்தின் கீழ் இது வரையில் 174 தகைமை வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு தமது தொழிற்படும் மூலதனத்தை பேணுவதற்கு உதவியாக ரூ. 1,843 மில்லியனை வழங்கியுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்கு அமானா வங்கி உதவிகளை வழங்கி, அதனூடாக நாட்டின் பொருளாதார செயற்பாடுகளை மீட்சியடையச் செய்வதற்கு பங்களிப்பு வழங்குகின்றது. 

சௌபாக்கியா கொவிட்-19 மறுமலர்ச்சித் திட்டத்திற்கான வங்கியின் பங்களிப்பு தொடர்பில் வணிக வங்கியியல் பிரிவின் உப தலைவர் இர்ஷாட் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “சௌபாக்கியா கொவிட்-19 மறுமலர்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தமை மற்றும் அதனூடாக வழங்கப்படும் நிதித் தொகையின் எல்லைப் பெறுமதியை அதிகரித்திருந்தமைக்காக, இலங்கை மத்திய வங்கியின் நடவடிக்கையை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பல சிறு வியாபாரங்களுக்கு நிலைத்திருப்பதற்கு அவசியமான நிவாரணத்தை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது என்பதில் நாம் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம். திட்டத்தினூடாக எம்மால் தனிநபர்களுக்கு நிலைத்திருப்பதற்கும் தமது சிறு வியாபாரங்களை வளர்ச்சியடையச் செய்யவும், சமூகங்களுக்கு சுபீட்சத்தை நோக்கி பயணிக்க ஊக்குவிக்கவும், மக்களின் சுய பெறுமதியை மேம்படுத்தவும் முடிந்துள்ளதுடன், விசேடமாக இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்கு மீட்சியடைய கைகொடுக்கக்கூடியதாக அமைந்துள்ளது. பொருளாதார கட்டமைப்பில் கீழ் மட்டத்தில் காணப்படும் மக்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டத்தை வங்கி பின்பற்றுவதுடன், இதனூடாக அவர்களுக்கு அவசியமான வளர்ச்சி மற்றும் வினைத்திறனை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான உதவிகளை ஏற்படுத்த முடிந்துள்ளது” என குறிப்பிட்டார். 

இலங்கை மத்திய வங்கியினால் அனுமதி அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி.; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (ISDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97% பங்குளைக் உரிமம் கொண்டுள்ளது. ISDB குழுமம் என்பது ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கிக்கு எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் கிடையாது. அதன் பிரத்தியேகமான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான அனாதை பராமரிப்பு நம்பிக்கை நிதியை ‘OrphanCare’ Trust ஐ மாத்திரமே பேணி வருகின்றது.

1 comment:

  1. பல்வேறு நோக்கங்களை வைத்து மக்களிடமிருந்து பணத்தைப பெற்றுக் கொளளும் ​போது இந்த வங்கி அமானா - நம்பிக்ைக, அதேநேரம் தாங்கள் நியாயமான வேண்டுகோளை நிறைவேற்ற உடன்படிக்ைகயின் பிரகாரம் பணத்தைத்திருப்பிக் கேட்டால் இந்த வங்கிக்குப் பெயர் கியானா - மோசடி - வங்கி என்பதாகும். இது எமது பல அனுபவங்களின் வாயிலாகவே கூறுகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.