கொரோனா வைரஸ் நோயாளிகளின் உடல்களை புதைப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்னமும் பல அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னரே இறுதி முடிவெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு பல தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர், என குறிப்பிட்டுள்ள அமைச்சர் அமைச்சரவை இது தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a comment