November 23, 2020

தமது அழிவை, தேடிக் கொள்ளப்போகின்றதா முஸ்லிம் சமூகம்...? ஏன் தோற்கடிக்கப்படுகின்றது...??


நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தல்முடிவுகள்  நாட்டின் பெரும்பான்மை சமூகத்தில் ஒரு புத்துணர்ச்சியையும்,, நம்பிக்கையையும் விதைத்துள்ளது ,ஆனால் முஸ்லிம் சமூகத்தில் "விடை தெரியாத சோகத்தை உண்டு பண்ணி உள்ளது" அதற்கான காரணங்கள் பல உள்ளன, அதில் ஒன்றை ஆராயிம் பதிவே இது,

#அரசியல்_பின்னணி

தேசியக் கட்சிகளின் பாரபட்சமும், தமிழ் தரப்பின் ஆயுத போராட்ட வடிவமும் மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களை தனித்துவக் கட்சியை ஆரம்பிக்கத் தூண்டியது, அதனூடான வளர்ச்சிகளும், அதனை வழி நடாத்துவதில்  அஷ்ரஃப் அவர்களின் ஆளுமையும்  சமூகத் தலைவர்களின் பங்கும்   அதிக செல்வாக்குப் பெற்றது,

#அஷ்ரஃபின்_வழிகாட்டல் 

ஒரு சமூகத்தை வழி நடத்துவது தலைவர்களிலேயே அதிகம்  தங்கி உள்ளது ,அதுவும் முஸ்லிம் சமூகம் போன்று உணர்ச்சிக்கு கட்டுப்பட்ட சமூகத்தை அஷ்ரஃப் அவர்கள் சிறப்பாக வழியமைத்ததோடு , வன்முறையில் இருந்தும் ,எல்லை மீறிய உணர்வுக் கோசங்களில் இருந்தும் பாதுகாத்து நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிலும், நாட்டுப் பற்றிலும் ஒன்றிணைந்த சமூகமாக வழி நடாத்தினார்,

#தேசிய_ஒருமைப்பாடும், #அணுகுமுறையும்,

அஷ்ரப் அவர்களின் காலத்தில் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் SLMC நேரடி ஆதரவு வழங்கியது அவை இரண்டிலும் வெற்றி பெற்றதுடன், சிங்கள மக்களுக்கு உதவி புரியும் தலைமையாகவும் ,சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்களின் கருத்துடன் ஒருமித்துச் செல்லும் சிறுபான்மைக் கட்சியாகவும் அடையாளப் படுத்தியது. மட்டுமல்ல அதன் மூலம் உருவான  சிங்களத் தலைவர்களும் நாட்டில் பலமான தலைவர்களாகவும் இருந்துள்ளனர் , அவர்கள் முஸ்லிம் சமூகத்தை மதித்து பல உதவிகளையும், சேவைகளையும் புரிந்துள்ளனர்.

#இன்றைய_நிலைமையும், #தலைமையும் ,

இன்றைய இலங்கை முஸ்லிம்களின் தலைவர்களாக உள்ள ஹக்கீம், றிஷாட் போன்றோர் ,அஸ்ரஃப் அவர்களை தமது அரசியல் குருவாக காட்டிக் கொண்டாலும், அவர்களது வழிமுறை தெளிவற்றதாகவே அமைந்துள்ளதுடன் இவர்கள் தம்மை நம்பி வாக்களிக்கும் மக்களையும் பிழையான வழிக்கு அழைத்துச் செல்பவர்களாகவே உள்ளதுடன்,  #போராளிகள்என்ற_பெயரில் நாட்டின் பெரும்பான்மை உணர்வுகளுடன் மோதல் நிலையை உருவாக்கும் இளைஞர் கூட்டத்தையும்  மறை முகமாக உருவாக்கி விடுகின்றனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது

#தலைவர்களது_பலவீனம்

கடந்த காலங்களில் முஸ்லிம் தலைவர்கள் பின்பற்றிய பல வழிமுறைகள் இன்றைய தலைவர்களால் கைவிடப்பட்டுள்ளன . தேசியக் கட்சிகளுடன் இணைந்து பயணித்த TB ஜாயா, பதியுத்தீன் மகமூத், ராசிக் பரீட், MS காரியப்பர்,  MH மொகமட் ,  அலவி மௌலானா, ARM மன்சூர்,BAமஜீட்,போன்ற பல தலைவர்கள் பின்பற்றிய வழிமுறைகளை அடியோடு மறந்ததுடன், அதற்கு நிகராக அஸ்ரஃப் அவர்கள் கொண்டு வந்த தனித்துவ இணைப்பு வழிகளையும் அலட்சியப் படுத்தி உள்ளனர்.

#தேசத்தை_நாடி_பிடித்தல் 

ஜனாதிபதித் தேர்தல் போன்ற ஒரு ஒரு பெரிய தேர்தலில் சிறுபான்மை  கட்சிகளும்,மக்களும்,பங்களித்தல் என்பது முக்கியமானது மட்டுமல்ல அதனை சரியாகப் பயன்படுத்தாத விடத்து அதுவே ஆபத்தானதுமாகும், அந்தவகையில் மு,.காவும்  அதன் தலைவர்களின் வழிமுறைகளும்   2000 மாம் ஆண்டில் இருந்து சந்திரிக்காவின் ஆட்சிக்கு பின்னர் தொடர் தோல்வியைத் தழுவி வந்திருக்கின்றது,   அரசியலில் தேசத்தை நாடி பிடிக்க தவறி உள்ளதுடன், மக்களும் வேண்டுமென்றே பலிக்கடாவாக்கப் பட்டுள்ளனர் 

#தோல்விக்கான_காரணங்கள் 

முஸ்லிம் கட்சிகளும், ஹக்கீமின் தலைமையும் வாக்களிக்கும் மக்களின் உணர்வுகளில் இருதந்து வேறுபடுவதற்கான காரணங்கள் பல உள்ளன அவற்றினாலேயே அவர்கள் தொடர் தோல்வி அடைகின்றனர், 

01). தமது தேர்தல்கால கோரிக்கைகளில் பேரம் என்ற பெயரில்  அமைச்சுப்பதவி, பணம் , போன்றவற்றை முதன்மைப் படுத்தி தீர்மானம் எடுத்தல்,

02) தீர்மானம் மேற்கொள்வதில், புத்திஜீவிகளையோ, சமூகத் தலைவர்களையோ கலந்து ஆலோசிக்காத சாணாக்கியம் என்ற போலி அடம்பிடிப்பு 

போன்றன பிரதான காரணங்கள் 

#புத்திஜீவித்துவ_வழிகாட்டலும்_பங்கும் 

அஷ.ரஃப் அவர்களின் காலத்தில் கட்சியின் முக்கிய தீர்மானங்களின் போதும், சமூக நிகழ்வுகளிலும் புத்திஜீவிகளினதும், சமூகத் தலைவர்களினதும், உலமாக்களினதும்  பஙகும்  அதிக இடம் பெற்றது, மட்டுமல்ல அஸ்ரஃப் புத்திஜீவிகளை மதித்தார் ,அவர்களை உரிய இடங்களில் அமர்த்தி சமூகத்தை வழிகாட்டினார்,

அந்தவகையில் பின்வரும் நிகழ்வுகள் சிறந்த உதாரணங்களாகும்,

1) இலங்கையின் முதலாவது முஸ்லிம்  பல்கலைக்கழக உபவேந்தராக Prof , காதர் அவர்களை  உருவாக்கியதும், அவரது வழிகாட்டலில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை வழி நடாத்தியதும் மிக முக்கியமான நிகழ்வு, பேராசிரியர் காதர் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் என்பது இன்னுமொரு சிறப்பு.

2). அஸ்ரஃப் அவர்கள் தான் எழுதிய "#நான் #எனும்_நீ" என்ற கவிதைத் தொகுப்பிற்கு பேராசிரியர் MA நுஃமான் அவர்களிடமே அதற்கான அணிந்துரையை பெற்றுக் கொண்டார், ஆனாலும் நுஃமான் அவர்கள் அஷ்ரஃபின் எதிர்பார்ப்பிற்கு மாற்றமான கருத்தையே அதில் குறிப்பிட்டு இருந்தாலும் அஷ்ரஃப் அவர்கள் அதனை மதித்து புத்தி ஜீவிக்குரிய இடத்தை வழங்கி அதனை பெருமிதத்துடன் ஏற்றார்,

#இன்றைய_கட்சியின்_நிலை

இன்றைய முஸ்லிம் கட்சிகளின் ,  உயர்பீடங்களிலும், அதன் தீர்மானங்களிலும் புத்திஜீவிகளுக்கான இடம் வெற்றிடமாகவே உள்ளது, மட்டுமல்ல அந்த இடங்களை தலைவரின் ஏவலாளிகள் நிரப்பியும் உள்ளனர், இது ஒரு சமூகத்தை வழிநடாத்த முன் வந்த சமூக அமைப்பின் மிகப் பெரிய தோல்விக்கான அடையாளமாகும், 

#ஏன்_நாம்_தோல்வி_அடைகின்றோம்? 

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை, சர்வதேச நாடுகளுடன் , தீவிர அமைப்புக்களுடன் இணைந்து இத்தேசத்தை அழிப்பதை ஆதரிக்க வில்லை ஆனாலும் நாம் தேர்தலிலும், நாட்டின் தலைவர்களிடமும் "#மாற்றாந்தாய் " மனப்பான்மையுடன் நோக்கப்படுவதற்கான காரணம் என்ன, ? 

சுதந்திரத்தின் பின் அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லை என்ற ஒரு சோகமான நிகழ்வுக்கு வழி அமைத்தவர்கள் யார்? ஒரு சமூகத்தை பிழையாக வழி நடாத்தி, உணர்ச்சியூட்டி, முறுகலின் முனைப்பில் கொண்டு வந்து நிறுத்தியதற்கான காரணம் எது?? என்பன போன்ற பல சீரியசான வினாக்களுக்கு நாம் எல்லோரும் விடை தேடுவது கட்டாயமானதாகும், 

#யார்_விட்ட_பிழை? 

இன்று ஏற்பட்டிருக்கும் நிலைக்கு காரணம் தனித்துவ அரசியல் என்ற ஒரு சமூக நீரோட்டத்தை தேசியக் கடலுடன் இணைக்காமல் சாக்கடையை நோக்கி அழைத்துச் சென்ற SLMC, ACMC தலைவர்களையே சாரும், அதற்கான காரணம் இவர்களது பிழையான தீரமானங்களைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் முஸ்லிம் சமூகம் பலவீனப்பட்டுள்ளதுதும், தலைமைத்துவப் பலவீனங்களுமே ஆகும் . அதனாலேயே இந்த வீணான  அரசியல் தீர்மானங்கள் எம் சமூகத்தை ஓரத்துச் சமூகமாக தேசத்தில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளது,

#என்ன_செய்யலாம்? 

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை நாடி பிடித்து அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான அரசியல் வழிகாட்டலை மேற்கொள்ளாது மக்களை பலிக்கடாவாக்கி சமூகத்தை தோல்விக்குள்ளாக்கி தமது எஜமானர்களதும்,,  தமதும் தனிப்பட்ட ஆசைகளையும் நிறைவேற்றியதுடன் சமூகத்தைத் தோற்கடித்த வரலாற்றுத் தவறை முஸ்லிம் தலைமைகள்  இழைத்துள்ளனர் . இதனை இனியும் விட்டு வைப்பது முழுச் சமூகத்தின் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும்.

அந்த வகையில் சுக்கான் இல்லாத கப்பல்களாகவும், கடிவாளமற்ற வண்டிகளாகவும் ஓடித் திரியும் இந்தக் கட்சிகளையும்,போலிப் புனைப்புக்களில் தம்மை ஆளுமைகளாகக் காட்ட முனையும் தலைவர்களையும், தட்டிக் கேட்டு சரியான பாதையில் வழி நாடாத்த முஸ்லிம் புத்திஜீவிகளும், சமூக, சமயத் தலைவர்களும் அவசரமாக முன்வர வேண்டும்,  அதற்கான இடத்தையும், அழைப்பையும் தலைவர்கள் வழங்க வேண்டும்,  ஏனெனில் இந்தக் கட்சிகள் உங்கள் வீட்டுச் சொத்தல்ல, இந் நாட்டை நேசிக்கும்,இங்கு வாழ  விரும்பும் முழு முஸ்லிம்  சமூகத்தின் சொத்தாகும்  

 எனவேதான் தமது கடந்தகால தலைமைத்துவப் பலவீனங்களை உணர்ந்து அதனை ஈடு செய்யவும், அவற்றிற்கான மாற்றுத் தீர்வுகளை அணுகி சரியான பாதையில் கட்சிகளை வழி நாடாத்தவும்,  வீண் வீறாப்புக்களை விட்டு தலைவர்கள் இறங்கி வந்து  உரிய இடங்களில் ஆலோசனைகளைப் பெற்று மாற்றங்களை நோக்கிப் பயணிக்க தயாராக வேண்டும்,   

இன மத பேதங்களுக்கு அப்பால் எமது தேசத்தை  கட்டமைப்பதற்கான ,உதவி புரியும்  அணுகு முறைகள் எதிர்காலத்தில் முஸ்லிம் கட்சிகளால் முன்வைக்கப்படுவதுடன், அதற்கான உள்ளார்ந்த மாற்றங்களையும் ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்,

இன்றேல் இலங்கையில் தமது அழிவை தாமாக வலிந்து வரவழைத்துக் கொண்ட சமூகமாக இலங்கை முஸ்லிம் சமூகம் மாற்றமடையும் , அதற்கான பிரதான காரணிகளாக முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்களுமே இருப்பார்கள் , என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லாமல் போகும்.

MUFIZAL ABOOBUCKER - SENIOR LECTURER,

UNIVERSITY OF PERADENIYA.


7 கருத்துரைகள்:

Muslim parties may be viable to north and east but in south we must do politics with three main national political parties .
Hakeem and Richard can not be blamed ..they are nothing but mere crafty politicians..they will fool public ..
now why do stupid pubic vote for them..
muslim public should know they could have protected their identiy;rights and human dignity if they have voted for sinhalses MPs in Muslim areas ..
In the name of Islam and Muslims Hakeem and Richard accumulated wealth and fame nothing else ..( do not blame them but blame youself for voting for them..They are fooling public.they are using Muslims to get their chair in parliament ..

You are correct but no need allow them to continue their activities throughout these parties any more immediately dissolve these parties and joint national political mainstream

Muslim kathci enru uruvahiyatho antril erunthu nam nattil namathu prahcinay aarambam.

இன்று முஸ்லிம் சமுகம் எதிர் நோக்கியுள்ள மிகவும் சவாலான இக்கட்டான சூழ்நிலையில் கட்டுரைகள் எழுதும் போது பல கோணங்களில் ஆராய்ந்து சிந்தித்து எழுத வேண்டும். தனித்துவ அரசியலின் தேவை உணரப் பட்டதனால் உருவாக்கப் பட்ட முஸ்லிம் கட்சிகள் அன்று முதல் இன்றுவரை தனித்துவமாக இயங்க வில்லை. மாறிமாறி ஆட்சி அமைத்த இரண்டு பேரினவாத கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் இணைந்து தேசிய அரசியலில் அங்கம் வகித்ததுதான் வரலாறு. 2019 இல் நடை பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் அதன் பிறகு நடை பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் பங்களிப்பு செய்யுமாறு இரண்டு பேரினவாத கட்சிகளும் SLMC ACMC ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. இதன் போது இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் சஜித் அணியுடன் சேர்ந்து பயணிப்பதற்கு முடிவு செய்தது. துரதிஷ்டவசமாக சஜித் அணி இரண்டு தேர்தலிலும் தோல்வி யுற்றது. அதனால் இன்று முஸ்லிம்கள் பழிவாங்கப் படுகின்றார்கள் என்பதுதான் உண்மை. ஒரு வேலை சஜித் அணி வென்றிருந்தால் அல்லது மகிந்த அணியுடன் சேர்ந்திருந்தால், இன்றைய நிலை முஸ்லிம்களுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இது ஒரு விடயம்.

ஹக்கீமும் ரிஷாட்டும் ஏன் மகிந்த அணியுடன் இணைந்து பயனிக்க மறுத்தார்கள் என்பதையும் விளங்க வேண்டும். அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப் பட்ட வன்முறையின் போது ஹக்கிமும் ரிசாட்டும் அமைச்சரவையிலும் பாராளுமண்றத்திலும் எதிர் கொண்ட அவமானங்கள் மற்றும் ஏமாற்றங்களே மகிந்த அணியை விட்டு விலக காரணமாய் அமைந்தது. மகிந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதம் உருவாக்ககப் பட்டது என்பதையும் ஹக்கீமும் ரிசாட்டும் நன்றாக புரிந்து கொண்டார்கள். இதுவும் ஒரு காரணம்.

இவற்றுக்கப்பால் இன்னுமொரு முக்கியமான காரணத்தையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

காலத்துக்குக் காலம் உருவாகும் முஸ்லிம் விரோத சக்திகளின் உலக முஸ்லிம்களுக்கு எதிரான சதியின் அரங்கேற்றம் இலங்கை முஸ்லிம்களையும் பாதிக்கின்றது.

எனவே காரணங்களை சரியாக புரிந்துகொண்டு குறை கூறுவதை தவிர்ப்பது நல்லது. நன்றி

I endorse Deen Mohamed's above comment. Pohottuwa played the racist card and misled the majority community. The author laments the intelligensia from the community was not consulted. I am sorry to ask: what is the contribution from Peradeniya university arabic and islamic studies department and political science department on muslim affairs and history for the last 70 years? No scholarly work to talk about, except some articles in Colombo Telegraph and in Jaffna Muslim. Problems facing the community are much more complex and not as simple as portrayed in the article.

டீன் அவர்களே, நீங்கள் சொல்லுவது என்னவென்றால் எந்த கட்சி அடுத்த தேர்தலில் வெல்லும் என்பதை பார்த்து அந்த கட்சியுடன் போட்டியிடவேண்டுமென்று? எப்போதும் ாலும் கட்சியுடன் எந்த ஒரு கொளகையும் இல்லாமல் இணைந்து கொள்ள வேண்டும். நல்லது.

Post a comment