November 30, 2020

கல்ஹின்னை அல் மனார் தேசிய கல்லூரி, இன்றுமுதல் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளது


-இக்பால் அலி-

பூஜாப்பிட்டிய சுகாதாரப் வைத்திய அதிகாரப் பிரிவிலுள்ள கல்ஹின்னை அல் மனார் தேசிய கல்லூரி இன்று  30 -11-2020 மூடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர்  அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

கல்ஹின்னை பிரதேசத்தில் ஜும்ஆ மஸ்ஜித் வீதி,  கட்டாப்பு போன்ற பகுதிகளில் மூன்று  கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பூஜாப்பிட்டிய , அங்கும்புர சுகாதார வைத்திய அதிகாரிகள்,  கட்டுகஸ்தோட்டை கல்வி வலயப் பணிப்பாளர்,  மற்றும் பூஜாப்பிட்டிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர்களுடைய ஆலோசனைகளுக்கு அமைய பாடசாலை மாணவர் மாணவிகளின் பாதுகாப்பு நலன்கருதி பாடசாலையை மூடுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


0 கருத்துரைகள்:

Post a comment