Header Ads



இஸ்லாத்தின் பார்வையில், திடீர் மரணம்


மரணம் நினைவுபடுத்தப்படுகின்ற அளவுக்கு மனிதனுடைய அற்ப ஆசைகளெல்லாம் அறுபட்டுப் போய்விடும். மனிதன் தனது மரணத்தை நினைத் துப் பார்ப்பது அதுவே அவனுக்கு மிகப் பெரும் பயிற்சியாக அமையும் என்ற கருத்தை நபியவர்கள் ஹதீஸுக்கூடாக தெளிவுபடுத்துகிறார்கள்.

மண்ணில் பிறந்தவர்கள் எல்லோரும் மரணத்தை சுவைத்தாக வேண்டும். அது வாழ்வின் நியதி. இது மாபெரும் உண்மை. இதனை மனித சமுதாயம் மறந்து வாழ்வதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம். உலகத்தில் எந்தவொரு விடயத்திலும் வேறுபாடுகள் தோன்றலாம் அபிப்பிராய பேதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால், இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஜீவனும் குறிப்பிட்ட ஒரு காலத்தின் பின்னர் மரணத்தை சுகித்தே தீர வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அதில் அபிப்பிராய பேதம் கிடையவே கிடையாது. ஆனால், மனிதர்கள் எல்லோரும் இந்த அடிப் படையான உண்மையை மறந்து வாழ்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையளிக்கிறது.

நாம் மரணத்துக்காக எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஏனென் றால் மரணம் எப்போது வரும், எந்த நிலையில் வரும் என்று எவராலும் உத்தரவாதப்படுத்த முடியாது. ஒரு மனிதன் நாளை என்ன செய்வான் என்ப தனை அந்த மனிதனால் நிச்சயமாக அறிந்து கொள்ள முடியாது. தான் மரணிக் கும் இடம், நல்லடக்கம் செய்யப்படும் இடம்… பற்றி எந்த மனிதனாலும் அறிந்து கொள்ள முடியாது. ரப்புல் ஆலமீனான அல்லாஹ் மாத்திரமே அனைத் தையும் ஆழமாக அறிந்தவன்.

நோயாளி சுகதேகி, உடலியல் ரீதியில் பலசாலி, உடல் பலவீனமானவன் என்ற வேறுபாடின்றி குழந்தைப் பருவம், சிறுபராயம், இளமைப் பருவம், மத் திம பருவம், முதிர்ந்த பருவம்… என்ற பாகுபாடின்றி வாழ்வின் எந்த நேரத்திலும் மரணம் எமது வீட்டுக் கதவைத் தட்டலாம். மரணம் பல உருவங்களில், பல வடிவங்களில் எம்மை வந்தடையும். அதனை எவராலும் தவிர்க்க முடியாது. இது குறித்து அல்குர்ஆன் இப்படிச் சொல்கிறது.

“நிச்சயமாக ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.” (ஸூரதுல் அன்பியா: 35)

மரணம் எப்பவும் வரும். பேசிக் கொண்டிருக்கும் போது வரும். தூங்கிக் கொண்டிருக்கும் போது வரும். நடந்து கொன்டிருக்கும் போதும் அதே போன்று விளையாடிக் கொண்டிருக்கும் போதும் அதே போன்று வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் போதும், உணவு அருந்திக் கொண்டிருக்கும் போதும் மரணம் வரௌம். 

மரணத்துக்கான காரணத்தை சிலர் திடீரென மௌத்தாகிட்டார் என்று சொல்வார்கள். அது பிழையானது. திடீரென மௌத்தாகினால் அது கொரோனா மரணம் என மக்கள் நினைக்கின்றனர். எனவே அவருக்கு ஏதாவது ஒரு நோய் இருந்திருக்கும். ஆஸ்துமா, தடிமன் போன்றவற்றைத் தவிற  மற்ற ஏதாவது ஒரு நோயால் மரணித்தார் என்று சொல்வதே தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது. 

உம்மத்து அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். 

நன்றி

இபுனு ஆதம் 

No comments

Powered by Blogger.