Header Ads



அமைச்சர்களாக சரத் வீரசேகர, சமல் ராஜபக்ஷ பதவியேற்பு



புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஆகியோர் இன்று (26) ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியாகும்.

அதேநேரம், இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு, உள்விவகாரம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.




1 comment:

  1. குடும்பத்தில் இன்னும் யாராவது எஞ்சியிருக்கின்றார்களா, இன்னும் பல அமைச்சுப் பதவிகள் இருக்கின்றன.

    ReplyDelete

Powered by Blogger.