Header Ads



அமெரிக்காவின் 46 ஆவது, ஜனாதிபதியாக ஜோ தெரிவு



அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிக்கு தேவையான வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளிவந்த நிலவரப்படி ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அவர் வெற்றி பெற்ற சில மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் 20 தேர்தல் வாக்குகளைக் கொண்ட பென்சில்வேனியாவில், தற்போதைய நிலவரப்படி  ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில், வெற்றி பெற 270 வாக்குகள் தேவைப்படும் நிலையில், ஜோ பைடன் 284 வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன் மூலம் அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி ஆகியுள்ளது.

No comments

Powered by Blogger.