Header Ads



கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது


நாட்டில் மேலும் 401 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பெரும் பாலானவர் கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது.

அதன்படி, நேற்றைய தினம் 401 பேர் கொவிட்-19 கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள் ளனர் இவர்களில் 201பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற் பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் 82 பேர், களுத் துறை மாவட்டத்தில் 32 பேர் , காலி மாட்டத்தில் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 04 பேர், குருணாகல் மாவட்டத்தில் 03 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 02 பேர் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவர் ஆகியோர் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் 27 பேர், கொழும்பு சிறைச்சாலை யில் 15 பேர் , புதிய மெகசின் சிறைச்சாலை 5 பேர் மற்றும் வெலிகட சிறைச் சாலையில் 5 பேர் ஆகியோர் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அத்துடன் சிறைச்சாலையில் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒருவர் மற்றும் ஏனைய மூவரும் வெளி நாடு களிலிருந்து இந்நாட்டுக்கு வருகை தந்தவர்களே இவ் வாறு கொரோனா தொற்றளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 18  ஆயிரத்தை தாண்டியது.

நேற்றைய தினம் திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் 398 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 568 ஆக உயர்ந் துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 075 ஆக உயர்ந் துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 562 பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5 ஆயிரத்து 799 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 516 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.