Header Ads



இலங்கையில் கட்டாய ஜனாஸா எரிப்பை, மீள் பரிசீலனை செய்யுங்கள் - 11 அமைப்புகள் ஜனாதிபதிக்கு கடிதம்


இலங்கையில் அமுலில் இருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பு நடைமுறை தொடர்பில் தமது கவலையையும் மீள்பரிசீலனையையும் கோரி ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் 'முஸ்லிம்' சமூக அமைப்புகள் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.

ஐக்கிய இராச்சியத்தில் சமூக நோக்கோடு இயங்கி வரும் 'முக்கிய' அமைப்புகள் கூட்டாக இணைந்து அனுப்பி வைத்துள்ள இக்கடிதத்தில் உலகில் ஏனை நாடுகளில் இருக்கும் நடைமுறை, சமய உரிமைகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலைத் தழுவி, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கையை செவிமடுத்து ஆவன செய்யுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கடிதம், லண்டன் தூதரகம் மற்றும் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக அக்கறை கொண்ட கீழ்க்காணும் 'முஸ்லிம்' அமைப்புகள் இதில் கையொப்பமிட்டுள்ளன: 

Association of Sri Lankan Muslims – Reading (ASLAM)

Al Furqan Islamic Da'wah Association, UK

British Sri Lankan Muslim Community Watford

Islah Trust, UK

Sri Lankan Muslim Diaspora Initiative UK (SLMDI UK)

Sri Lankan Muslim Foundation Crawley (SLMFC)

Sri Lankan Muslim Foundation – Leicester

Sri Lankan Muslim Walfare Association Crawley (SLMWAC)

Sri Lankan Moors Society – UK

Tees Lanka Islamic Society – Middlesbrough

UK Madawala Welfare Society (UKMBWS)

தகவல் அனுப்பியவர் NM அமீன்

2 comments:

  1. முஸ்லிம்கள் மீது அனைத்து சிங்கள மக்களும் கடும் கோபத்தில் உள்ளார்கள்.

    இதற்கு முக்கிய காரணம், மயில்-மரம் கட்சிகளை சேர்ந்த MPகள் செய்துவந்த கள்ள வேலைகள், ஊழல்கள், துரோகங்கள் தான். இவர்களின் MP பதவிகளையும் நீக்கினால் தான் சிங்களவர்களின் கோபம் தணியும், உங்கள் மத உரிமைகள் கிடைக்கும்

    ReplyDelete
  2. இப்படி முஸ்லிம் தலைவர்களையும் இல்லாமலாக்கும் திட்டத்தில் அதிகம் பேர் குதித்துள்ளார்கள்.

    தலைவர்கள் இருந்து சத்தம்போடும் போதே இவ்வளவு என்றால் அவர்களும் இல்லை என்றால்...

    துவேஷம் அதிகரித்துள்ள இக்காலத்தில் இருக்கும் தலைவர்களையும் இல்லாமலாக்குவது கடலில் மூழ்குவதற்கு சமன்

    ReplyDelete

Powered by Blogger.