Header Ads



போருத்தொட்ட அல்பலாஹ் கல்லூரியில் 11 மாணவர்கள் சித்தி



கம்பஹா மாவட்டத்தின் தமிழ் மொழிமூல முஸ்லீம் பாடசாலைகளில் எமது பலகத்துரை அல்பலாஹ் கல்லூரி மாணவர்கள் 11 பேர் திரமைச்சித்தியடைந்து கல்லூரிக்கும் ஊருக்கும். அதனோடு தொடர்புடைய அனைவருக்கும் பெறுமையைத் தேடித்தந்துள்ளார்கள்.

கொவிட் 19  காரணமாக கல்விக்கான வசதிகள் முடங்கிய சூழ்நிலையில் இம்மாணவமணிகல் சிறந்த பெறுபேர்களைப் பெற்றுக்கொண்டமை பாராட்டத்தக்கதே.,கொவிட் பிரச்சினை இல்லாது இருந்தால் சுமார் 20  மாணவர்களாவது வெற்றியீட்டி இருப்பார்கள்.

 எமது அல்பலாஹ் கல்லூரியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சிறப்பாக அமைந்தமைக்கு  முதலில் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்

அடுத்து அயராது பாடுபட்ட மாணவர்கள், அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்கள்,  சிரமம் பாராது மாணவர்களுக்கு வழிகாட்டிய வகுப்பாசிரியர்கள்,  மற்றும் ஏனைய ஆசிரியர்கள், பகுதித் தலைவர் மற்றும் ஆசிரியர்களுக்கு துணையாக சேவையாற்றிய volunteers, தரம் 3 முதல் சனிக்கிழமைகள் தோறும்  பிரத்தியேக வகுப்புகள் நடாத்திய nayeem sir, fasmi sir, asmin sir, மற்றும்,பல தியாகங்களை செய்து நேர காலங்களை ஒதுக்கி தொடராக சனிக்கிழமை தோறும் நடாத்தப்பட்ட வகுப்பிற்கு பெரும் துணையாக இருந்த பெற்றோர் குழுமத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.  அத்தோடு  பாடசாலையின் மேம்பாட்டுக்கு சகல துறைகளிலும் ஒத்துழைப்பை வழங்கும், O B A, &  S D E C, management group, அதேபோன்று இறுதி தருணம் வரை விடா முயற்சியில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் வழிகாட்டி உதவி அதிபர், பிரதி அதிபர்கள், அதிபர் ஆகியோருக்கும் குறிப்பாக தரம்1 முதல்5 வரையான பிரைமரி  மாணவர்களுக்கான பொருப்பாசிரியரும் பிரதி அதிபருமாகிய ஜனாப் அஜ்மல் ஆசிரியரது அதி கூடிய முயற்ச்சியும் வழிகாட்டலும் மேற்படி அல்பலாஹ்வின் மேம்பாட்டுக்கும் கல்வி வளர்ச்சிக்கும் முக்கிய பங்காகும். இவர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 


 தகவல்.

 M. பாயிஸீன்

  16/11/2020

No comments

Powered by Blogger.