Header Ads



விசேட அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம் - 11-3422558 என்ற இலக்கத்துக்கு அழைத்து சேவையைப் பெற முடியும்


கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்காக, நாளை தொடக்கம் விசேட அம்பியூலன்ஸ் சேவை மற்றும் விசேட வைத்திய சேவையையும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்களாயின், அவர்களை வைத்தியசாலைகளுக்குக் கொண்டுச் செல்வதற்காக, இச்சேவை முன்னெடுக்கப்படவுள்ளதென்றார்.

இதற்கமைய, மீதொட்டமுல்ல வித்தியாலயத்தில் 24 மணிநேரமும் செயற்படும் வகையில், அம்பியூலன்ஸ் சேவை பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதேச சுகாதார சேவை பணிப்பாளரின் கீழ், கொலன்னாவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு இணைவாக இந்த சேவை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் சேவையைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருக்குமாயின்,011-3422558 என்ற இலக்கத்துக்கு அழைத்து, இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.