Header Ads



முஸ்லிம் Mp க்களின், ஆதரவில்லாமல் 20 ஐ நிறைவேற்றியிருக்க முடியாது - இராஜாங்க அமைச்சர் துமிந்த


சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றிருக்காது என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளர். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு சுதந்திரக் கட்சியின் ஆதரவு முக்கியமானது.

அத்தோடு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் அவர்கள் இந்த சாதனையை அடைய முடியாது.

மேலும் நாட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்து இதுபோன்ற முடிவுகள் எட்டப்படுவதாகவும் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. SLFP cannot survive alone. So they hang on other party. I like the policies of Anura kumara thissanayake. He is the remarkable plitician. The policies of presen the JVP is very good.It is the time to give power of people to JVP.

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் 6 பேர் மட்டுமா எதிர் கட்சியில் இருந்தார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.