Header Ads



முகக் கவசம் தொடர்பில் Dr அமரசிங்க, விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


முகக் கவசங்கள் அதிக பட்சம் 4 மணித்தியாலங்கள் மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பொது சுகாதார சிறப்பு மருத்துவர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார.

4 மணித்தியாலங்களில் பயன்படுத்திய பின்னர் அகற்றப்படும் முகக் கவசத்தை பாதுகாப்பாக அகற்றி குப்பை தொட்டியில் போட வேண்டும். பின்னர் புதிய முகக் கவசம் ஒன்றை அணிந்து கொள்ள வேண்டும்.

வேலைக்கு செல்வோர், அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்வோர் இந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..

4 மணி நேரத்தின் பின்னர் அகற்றும் முகக் கவசத்தை குப்பை தொட்டியில் போடுங்கள். ஆங்காங்கே போட வேண்டும். அதன் ஊடாக இந்த கொரோனா வைரஸ் பரவ கூடும்.

முகக் கவசம் அணியும் போது வாய் மற்றும் மூக்கு முழுமையான மூடும் வகையில் அணிவது கட்டயமாகும். முகக் கவசத்தை சரியான வகையில் பயன்படுத்தவில்லை என்றால் கொரோனா தொற்றுள்ள ஒருவரிடம் இருந்து கொரோனா பரவும் ஆபத்து உள்ளது.

நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதென்றால் மேலதிகமாக இரண்டு முகக் கவசங்களை கொண்டு செல்வது கட்டாயமாகும். அது உங்கள் சுகாதார பாதுகாப்பிற்கு நல்லது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. nடாக்டர் அமரசிங்க அவரகள் வீடுத்துள்ள அவசர அறிவித்தல் மிகவும் முக்கியமானது. தற்போது சந்தையில் 80 - 200 ரூபாவிற்கும் அதிகமாக முகக்கவசங்கள் விற்கப்படுகின்றன. டொக்டர் அவரகள் கூறுவதுபோல் முகக் கவசத்தைப் தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய உச்ச நேரம் சுமார் நான்கு மணித்தியாலங்கள்தான். அவை எப்படிப்பட்ட கவசங்களாக இருந்தாலும் சரியே. எனவே இத்தகைய அறிவுரைகளை ஏற்று நடக்க வேண்டியது எமது கடமையாகும். இலங்கையின் 65மூமான மக்கள் முகக்கவசத்தை வாங்குவதற்கு பொருளாதாரரீதியில் முடியாதவரகள். அவரகளுக்கான ஒரு வழியினை அரசு அல்லது பொதுநல அமைப்புகள் செய்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  2. அப்ப முகக்கவசம் வாங்க வேறயா உழைக்கனும்.

    ReplyDelete
  3. Doctor da arivu uraiya mattum kelungadaa.

    ReplyDelete

Powered by Blogger.