Header Ads



சபாநாயகர் முகக்கவசம் அணிகிறார் இல்லையென சஜித் குற்றச்சாட்டு


பாராளுமன்றம் இன்று கூடிய போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முன்மொழியப்பட்ட சுகாதார நடைமுறைகளைச் சபாநாயகர் கூட பின்பற்றவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.


இன்று 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கடந்த 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் இருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளி கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் இதனை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய போது, சமூக இடைவெளி காணப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இது சட்டத்தை மீறியுள்ள செயற்பாடாகும். சபாநாயகர் கூட முகக்கவசம் அணிந்து வரவில்லை. எனவே, அவரும் இந்தச் சட்டத்தை மீறியுள்ளார்.


சட்டத்தை இயற்றும் பாராளுமன்றத்திலேயே இந்த நிலைமை இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, சுகாதார ஆலோசனைக்கு இணங்க பாராளுமன்ற ஆசனங்களை ஒழுங்குபடுத்தி, பின்னர் பாராளுமன்றம் ஒன்றுகூடுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம் என சஜித் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Oorukkadi upathesam.Unakkum enakkum illaiadi.Arasiyalvaathikal veeddil manaiviudan Pesuvathu.

    ReplyDelete

Powered by Blogger.