Header Ads



சுவிட்சர்லாந்தில் கொரோனா கோரத்தாண்டவம் - மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கலாம்



நிலைமை மேம்படாவிட்டால், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மொத்தமாக ஸ்தம்பிக்கும் நிலை வரும் என கொரோனா பெருந்தொற்று தொடர்பில் பெடரல் அரசின் ஆலோசகர் தலைவர் எச்சரித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையிலிருந்து எதுவும் மாறாவிட்டால், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் திறன் வரம்பு நவம்பர் 5 தொடங்கி 18 க்குள் எட்டப்படும் என்று மதிப்பிட்டுள்ளதாக Martin Ackermann தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை பெர்ன் மண்டலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி காத்திருக்க நமக்கு நேரம் இல்லை என அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மட்டும், சுமார் 6,634 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரான்சில் 100,000 பொதுமக்களில் 450 பேர் கொரோனாவுக்கு இலக்காவதாக தகவல் வெளியான நிலையில், சுவிஸில் இந்த எண்ணிக்கை தற்போது 495 என்ற அபாய கட்டத்தில் உள்ளது.

ஒவ்வொரு வாரம் செல்லுந்தோறும் கொரோனாவால் மருத்துவமனையை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,

அதே எண்ணிக்கையில் இறப்பும், தீவிர சிகிச்சை நாடுவோரும் உள்ளனர் என Ackermann தெரிவித்துள்ளார்.

கடந்த 14 நாட்களில் மட்டும் 689 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 75 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக சுவிட்சர்லாந்தில் இதுவரை 103,653 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 1877 பேர் மரணமடைந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.