Header Ads



வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின், உள்ளங்களில் இடம்பிடித்த ஜனாதிபதி


மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதானம், ஜீவனகம – கஜுவத்த வீதி மற்றும் கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் மதுரங்குளி – மஹகும்புக்கடவல ஊடாக ஆண்டிகம வரையிலான வீதி அபிவிருத்திப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி புத்தளம் மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்த அபிவிருத்திப் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஜனாதிபதி அவர்கள் மதுரங்குளி முன்மாதிரிப் பாடசாலைக்கு சென்ற வேலையில் மாணவர்கள் முன்வைத்த கோரிக்கை இராணுவத்தின் பொறியியல் படையணியிடம் வழங்கப்பட்டது. அப்போது முதல் 18 நாள் குறுகிய காலப்பகுதியில் மைதான நிர்மாணப் பணிகளில் சுமார் 90வீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தின் காரணமாக மைதானம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. தற்போது அது 2200 கியுப் மண் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. மைதானத்தின் பாதுகாப்பற்ற கட்டிடத்தை அகற்றமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்திருந்தார். அக்கட்டிடம் தற்போது அகற்றப்பட்டுள்ளதுடன், புதிய கட்டிடமொன்று நிர்மாணிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையொன்றில் பேரில் ஜீவனகம- கஜுவத்தை வரையிலான வீதியின் 4.6 கி.மீ பகுதி காபட் செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரங்குளிய – தொடுவாவ மற்றும் கல்பிடிய – புத்தளம் வீதியை இணைக்கும் வீதி சேதமுற்றிருந்த காரணத்தினால் நீண்ட காலமாக பிரதேச மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். கல்பிடிய, தலவில புனித ஆனா தேவாலயத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கும் இந்த வீதியை பயன்படுத்த முடியும்.

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் மதுரங்குளிய மஹகும்புக்கடவல ஊடாக ஆண்டிகம வரையிலான வீதி பெரிதும் சேதமுற்றிருந்ததை மக்கள் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் அதன் நிர்மாணப் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டதுடன், 9.7 கி.மீ வீதி காபட் செய்யப்பட்டு அபவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. 

மழை காலங்களில் வீதியின் சில இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் நிலை இருந்தது. அவ்வீதி 05 மீற்றர் அகலத்திற்கு அபிவிருத்தி செய்யப்படுவதுடன் அதற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது


மொஹான் கருணாரத்ன

பணிப்பாளர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு.

2020.10.16

No comments

Powered by Blogger.