Header Ads



ட்ரம்பிற்கும், மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது


அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய அதிபர் டெனால்ட் ட்ரம்பும், அவரது மனைவியும் தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு முடிவுக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் அவர்களது பரிசோதனை முடிவுகளில் ட்ரம்ப் மற்றும் மெலினா ட்ரம்ப் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் டெனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்,

இன்றிரவு நானும் முதல் பெண்மணியும் கொவிட்-19 க்கு நேர்மறையான சோதனை செய்தோம். எங்கள் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் பல தடவைகள் அமெரிக்க அதிபர் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.