Header Ads



ஹக்கீம் தெரிவித்துள்ள, முக்கிய விடயங்கள்


20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே தமது உறுப்பினர்கள் தன்னிடத்தில் அனுமதி பெற்று ஆதரவை வெளியிட்டதாக கூறியிருக்கின்றார்கள், அது முற்றிலும் தவறான விடயமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு அத்தகைய ஒரு அனுமதியை வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்கள் இருவர் உட்பட நான்கு உறுப்பினர்கள் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வெளியிட்டமை, அதுபற்றி எடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள், முஸ்லிம் காங்கிரஸ் மீது எழுந்துள்ள விமர்சனங்கள், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக நேற்றையதினம் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இதன்போதே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை வாழ் முஸ்லிம்களின் அடையாளமாக செயற்பட்டு வருகின்ற அரசியல் கட்சியாகும்.

அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலத்தில் தேசிய ரீதியில் தனது சமூகம் சார்ந்து உரிய தருணங்களில் சரியான தீர்மானங்களை எடுத்தே வந்திருக்கின்றது.

அவ்வாறான நிலையில் கடந்த காலத்தில் 18ஆவது திருத்தினை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தது. இந்த பாவத்தினை கழுவுவதற்காக 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்திருந்தது.

அதுமட்டுமன்றி தற்போதைய ஆட்சியாளர்கள் நீண்டகால நோக்கில் ஜனநாயகத்தினை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்தினை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்திருந்தது.

நாடாளுமன்றத்தின் ஊடாக 20ஆவது திருத்தினை நிறைவேற்றும் செயற்பாட்டை தடுக்க முடியாது என்பதற்காகவே அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தினையும் முஸ்லிம் காங்கிரஸ் நாடியிருந்தது.

இறுதி தீர்மானம் எடுக்கவில்லை இவ்வாறான நிலையில் எமது கட்சியின் உயர்பீடத்தில் 20ஆவது திருத்தம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடல்கள் நடைபெற்றிருந்தான.

அச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் கிழக்கு மாகாண மக்களின் நிலைமைகள், அங்குள்ள சூழல்கள் தொடர்பில் அதிகளவான கரிசனைகளை வெளியிட்டார்கள்.

இதனால் ஒரு தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனினும், நீண்டகால அடிப்படையில் ஜனநாயகத்தினை ஒழிக்கும் விடயத்திற்கு ஆதரவளித்து நாட்டை தாரைவார்க்க முடியாது என்ற நிலைப்பாட்டினை தலைவர் என்ற வகையில் உறுதியாக கூறியிருந்தேன்.

இவ்வாறான நிலையில் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே எமது உறுப்பினர்கள் என்னிடத்தில் அனுமதி பெற்று ஆதரவை வெளியிட்டதாக கூறியிருக்கின்றார்கள். அது முற்றிலும் தவறான விடயமாகும்.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு அத்தகைய ஒரு அனுமதியை வழங்கவில்லை. மேலும் உயர்பீடத்தில் தீர்மானம் இறுதியாகாத நிலையில் கட்சியின் தலைமையின் தீர்மானம் தொடர்பில் அவர்கள் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக அந்த விடயத்தில் அவர்கள் அக்கறை காட்டவே இல்லை.

இந்த நிலையில் நான் அவர்களுடன் சந்திப்பினை (நேற்று முன்தினம்) நடத்தியிருந்தேன். அதன்போது அவர்கள் கட்சியையும், தலைமையையும் விட்டுப் பிரிந்து செல்லும் நோக்கமில்லை என்று உறுதிபடக் கூறியுள்ளார்கள்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் ஏனைய பிரதேசங்களை விடவும் மாறுபட்டதாக உள்ளதால் தான் அவ்விதமான முடிவினை எடுக்க வேண்டி ஏற்பட்டதாக திரும்பத்திரும்ப என்னிடத்தில் கூறினார்கள்.

அனைத்தும் நடந்து முடிந்து விட்ட நிலையில் என்னிடத்தில் விளக்கங்களை அளிப்பதால் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களும் தர்மசங்கடமான நிலைமைகளும் மாறப்போவதில்லை என்பதை அவர்களிடத்தில் கூறினேன்.

ஆகவே அடுத்த கட்டமாக எதிரணியுடன் நாம் எவ்வாறு தொடர்ந்தும் ஐக்கியமாக செயற்படுவது, நம்பிக்கையை கட்டியெழுப்புவது, தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைமைகளுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட விடயங்கள் தொடர்பில் உயர்பீடத்தில் இறுதி முடிவு எடுப்போம் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

14 comments:

  1. Hakeem should quit from his SLMC leader post. Anyone who cannot control his party MPs cannot be a leader. Much better if he dissolve the party altogether. If none of these happens, voters should wipe the party out completely as they did it to UNP.

    ReplyDelete
  2. ஹக்கிம் சார், சும்மா கதை விடாதீர்கள். அங்கேயும் பாடி இங்கேயும் பாடி இரு தரப்பிலிருந்தும்
    சலுகைகள் பெறுவது தானே SLMC யின் கொள்கை.

    இந்த நேர்மை அற்ற கொள்கை பல சயங்களில் பணம்-பதவிகள் தந்தாலும், சிலநேரங்களில் ஆபத்தாகவும் முடியலாம். இதனால் தானாக்கும் சிங்கள மக்கள் இப்போ உங்களை தூற்றுகிறார்கள், புலிகள் 90யில் வெளியேற்றினார்கள்.

    ReplyDelete
  3. முஸ்லிம்களின் அடையாளமாக இந்த நாட்டில் உமது கட்சியும் நீரும் உமது பாராளுமன்ற பிரதிநிதிகளும் இருப்பதாக இனியும் கூற வேண்டாம்.
    உமக்கு எதிராக கிளர்ந்து எழாத இந்த சமூகத்தை நீரும் உமது அடிவருடிகளும் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் தோளில் சுமந்தாலும் ஈடாகுமா?
    இந்த அப்பாவி இலங்கை முஸ்லிம்களை உலகிற்கு காட்டாது எங்களை விட்டுவிடு.போதும் உமது சாணாக்கிய திருவிளையாடல்.

    ReplyDelete
  4. நடந்து முடிந்த நாடகத்தை இயற்றியவா் யார் என்று சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அடுத்த தேர்தலில் மு.கா எமது சமூகத்திற்க அவசியமற்றது என்பதை கிழக்கு மாகாண மக்கள் புரியவைப்பார்கள் என்பதுதான் எனது தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  5. Big drama.muslim ummah should remove slmc n rishard party.
    Bring good politicians for society.they always crossig for big amount cash.we correct our self.

    ReplyDelete
  6. He took the big amount for 18th amendment too.people dont ever forget.

    ReplyDelete
  7. Mr. Rauf Hakeem

    This is very Confusing. Those 4 MPs who voted for the 20A say that you gave them the option of voting according to their conscience and they voted accordingly. But you say that you did NOT give them any such choice and they are LYING. That leads to two Important questions.

    1. What was your REAL Instruction to them regarding the voting on 20A.

    2. Since this is a Very SERIOUS Matter, what action are you going to
    take against those MPs who Not Only Failed to follow your
    Instructions but are also MISLEADING All the people of this country
    by Telling LIES and Creating a Very BAD Impression about you and the
    Party, SLMC.

    ReplyDelete
  8. இந்த அரசியல் முஸ்லீம் காங்கிரசுக்கு புதியதல்ல. ஹிஸ்புல்லாஹ்,அதாஉல்லா,பஷீர், இன்று இந்த எட்டப்பர்கள். வீர வசனங்கள் பேசி முஸ்லீம் காங்கிரசில் வளர்ந்து பிறகு, முழு முஸ்லிம்கள் சம்பந்தமான பிரச்சினைகளில் தங்களது பிரதேச நலனை மட்டும் வைத்து முடிவெடுப்பார்கள். இவர்களுக்கு தெரியும் கட்சி தீர்மானத்திற்கு எதிராக, அரசுக்கு ஆதரவாக செயல் பட்டால் முஸ்லீம் காங்கிரசை விட்டு விரட்டினாலும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளுடன் நிறைய சன்மானங்கள் கிடைக்கும் என்பது. பிரதேச நலனை மட்டும் செயல் படும், அரசியல் வாதிகள்.

    ReplyDelete
  9. இலங்கை அரசியலில் கிழக்கு மாகாண அரசியல் வாதிகள் தனித்துவம் மிக்கவர்கள்.

    ReplyDelete
  10. As per my knowledge,now this country no need of any religious/ethnic based parties. So, worked with national parties dissolving all these religious/ethnic based parties.

    ReplyDelete
  11. Brother Hakeem, you are not in control of your party members who have undermined the efforts of opposition. Tell them to leave the party and join the Government or you resign from the party and join the opposition.

    They are bunch of opportunists who used the opposition coalition to become MPs and now bought over by the Government. If they are really worried about Tamil politicians like Pillayan, Karuna and Wiyalensran being with the Government they should have contested under the party of Athaullah. SLMC has become a party that facilitates people to become rich after every election.

    ReplyDelete
  12. நீங்கள் எதை செய்தாலும் முதுகெலும்பு உள்ள தலைவராக இருங்கள்.நான் என்ன செய்ய என்ற கேள்வியை கேட்க கூடாது. இது தலைவருக்கு அழகில்லை.

    ReplyDelete
  13. சானப்பி விளக்கம்

    ReplyDelete
  14. I made the following comments at 07.00 am, this morning. It is 15 1/2 hours since I posted the comments and it is yet to be published.

    Quote

    Mr. Rauf Hakeem

    This is very Confusing. Those 4 MPs who voted for the 20A say that you gave them the option of voting according to their conscience and they voted accordingly. But you say that you did NOT give them any such choice and they are LYING. That leads to two Important questions.

    1. What was your REAL Instruction to them regarding the voting on 20A.

    2. Since this is a Very SERIOUS Matter, what action are you going to
    take against those MPs who Not Only Failed to follow your
    Instructions but are also MISLEADING All the people of this country
    by Telling LIES and Creating a Very BAD Impression about you and the
    Party, SLMC.


    Unquote

    ReplyDelete

Powered by Blogger.