Header Ads



சிங்கள ராவய, பிவித்துரு ஹெல உறுமய அரசியல் கட்சிகளாக அங்கீகாரம்


சிங்கள ராவய, பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட ஆறு கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்றைய தினம் -14- இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமய, சிங்கள ராவய, அருனலு ஜனதா பெரமுன, மக்கள் சேவகன் கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி மற்றும் சமத்துவ கட்சி ஆகியனவே இவ்வாறு புதிதாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாகும்.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக, கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி மாதம் கோரப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்போது 154 அரசியல் கட்சிகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட 154 விண்ணப்பங்களில் 121 கட்சிகள் தொடர்பில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு ஆறு கட்சிகளை மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

1981ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்றச் சட்டத்தின் 7(4) மற்றும் (5) சரத்துக்களின் அடிப்படையில் தேசிய தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகளை பதிவு செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.